Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சைலண்டாக நடைபெற்ற தீபக் சஹார் திருமணம்.. மணப்பெண் யார் தெரியுமா??.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

டெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தீபக் சஹாருக்கு சத்தமின்றி திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக இருப்பவர் தீபக் சஹார். இந்திய அணியிலும் கலக்கி வருகிறார்.

மெகா ஏலத்தில் ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட தீபக் சஹாரால், காயம் காரணமாக இந்தாண்டு விளையாட முடியாமல் போனது.

 சோதனை நாட்கள்

சோதனை நாட்கள்

கால் மற்றும் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டதால் இனி எப்போது இந்திய அணிக்கு திரும்புவார் என்ற கவலை உள்ளது. இந்நிலையில் இந்த சோதனை காலத்திலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை போன்று திருமணம் செய்துக்கொண்டுள்ளார். அவரின் நீண்ட நாள் காதலியான ஜெயா பரத் வாஜை கரம்பிடித்துள்ளார்.

 காதலை கூறிய தருணம்

காதலை கூறிய தருணம்

ஜெயா பரத்வாஜ் டெல்லியில் உள்ள டெலிகாம் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு ஐபிஎல்-ல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி முடிந்தவுடன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்தே தீபக் சஹார் தனது காதலை ஜெயா பரத்வாஜூக்கு வெளிப்படுத்தினார். இதற்கு ஜெயா ஓகே என பதில் கொடுக்க ஒட்டுமொத்த மைதானமும் அதிர்ந்தது. இணையத்தில் மோதிரம் அணிவித்துவிட்ட புகைப்படமும் வைரலானது.

 பிரமாண்ட திருமணம்

பிரமாண்ட திருமணம்

தற்போது இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று (ஜூன் 1) இருவரும் திருமணம் செய்துகொண்டனர். டெல்லி ஆக்ராவில் உள்ள ஜேபீ பேலஸ் என்ற பிரமாண்ட ஹோட்டல் முழுவதும் புக் செய்யப்பட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்த திருமண நடைபெற்றிருக்கிறது. இதுகுறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வரவேற்பு நிகழ்ச்சி எங்கு

வரவேற்பு நிகழ்ச்சி எங்கு

டெல்லியில் உள்ள ஐடிசி மயூரா ஹோட்டலில் இன்று இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒட்டுமொத்த ஹோட்டலும் புக் செய்யப்பட்டுள்ளன. இதில் சிஎஸ்கே வீரர்கள், இந்திய அணி வீரர்கள் என பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விராட் கோலி, தோனி ஆகியோர் குடும்பத்துடன் கலந்துகொள்ளவுள்ளனர்.

Story first published: Thursday, June 2, 2022, 22:50 [IST]
Other articles published on Jun 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+