Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் தொடரிலிருந்து தீபக் சாஹர் விலகல்.. பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. சிஎஸ்கேக்கு பின்னடைவு

மும்பை: ஐபிஎல் தொடரிலிருந்து தீபக் சாஹர் காயம் காரணமாக விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் நடப்பு சாம்பியனான சிஎஸ்கேக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தீபக் சாஹர் ஐபிஎல் சீசனின் முதல் சில போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

Deepak chahar ruled out from IPL 2022- official announcement

இதனால் காயத்திலிருந்து குணமடைந்து வந்த தீபக் சாஹர், மீண்டும் பயிற்சியை தொடங்கினார்.

வரும் 25ஆம் தேதி சிஎஸ்கே அணிக்கு தீபக் சாஹர் திரும்புவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் முதுகு பகுதியில் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், அவர் 4 மாதங்கள் கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் மட்டுமல்லாமல் டி20 உலககோப்பை தொடரிலும் தீபக் பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இது சிஎஸ்கேக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாற்று வீரரை தேர்ந்து எடுக்கும் பணியில் சிஎஸ்கே ஈடுபட்டுள்ளது.

சிஎஸ்கேவின் விருப்ப பட்டியலில் இஷாந்த் சர்மா, மோஹித் சர்மா மற்றும் ஜி பெரியசாமி ஆகியோர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று கொல்கத்தா அணியில் இடம்பெற்ற ராஷிக் சலாம் கொயம் காரணமாக விலகினார். அவருக்கு பதிலாக ஹர்சித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.

Story first published: Friday, April 15, 2022, 19:37 [IST]
Other articles published on Apr 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+