காயம் காரணமாக தீபக் சாஹர் விலகல்.. தமிழக வீரருக்கு மீண்டும் வாய்ப்பு.. ரசிகர்கள் ஏமாற்றம்
மும்பை : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியில் இடம் பிடித்திருந்த தீபக் சாஹர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
டி20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தீபக் சாஹருக்கு ஏற்பட்டுள்ள காயம் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை தந்துள்ளது.
இந்த நிலையில் அவருக்கு பதிலாக மாற்று விரராக தமிழக கிரிக்கெட் வீரர் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் யார் ? என்ன காரணம் என்பதை தற்போது காணலாம்.

தீபக் சாஹர் இல்லை
பும்ரா காயம் காரணமாக விலகிய நிலையில், டி20 உலக கோப்பை ரிசர்வ் அணியிலிருந்த தீபக் சாஹரை பலரும் அணியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தீபக்சாகர் இடம் பெறவில்லை. தொடர்ந்து டி20 போட்டி விளையாடி வருவதால் தீபக்சாகருக்கு ஓய்வு வழங்கப்பட்டு இருக்கலாம் என நினைக்கப்பட்டது.

காயம்
ஆனால் பயிற்சியில் ஈடுபடும் போது தீபக்சாகர் காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. தீபச்சாகர் ஓடும்போது அவரது கால் மடங்கி சுளுக்கு ஏற்பட்டிருக்கிறது . இதனால் டி20 உலககோப்பை தொடருக்குள் அவர் முழு உடல் தகுதியை பெற வேண்டும் என்பதற்காக தீபக்சாகர் தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து விலகப்பட்டுள்ளார்.

மாற்று வீரர் யார்
தீபக் சாஹருக்கு பதிலாக தமிழக கிரிக்கெட் வீரர் வாசிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். வாசிங்டன் சுந்தருக்கு பல முறை வாய்ப்பு தரப்பட்டும், அவர் போட்டி தொடங்குவதற்கு முன்பு காயம் காரணமாக வெளியேறிவிடுவார். இந்த நிலையில், தென்னாப்பிரிக்க தொடர் அவருக்கு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

காரணம் இது தான்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெறும் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி அந்த போட்டியில் வெறும் 6 பேட்ஸ்மேன்களுடன் மட்டுமே களமிறங்கியது, தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இதனால் வாசிங்டன் சுந்தர் நல்ல பேட்ஸ்மேன் என்பதால், அவர் பிஸ்னாய்க்கு பதில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications