Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் போட்டியிலேயே இப்படியா.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய தீபக் சஹார்.. ஆசிய கோப்பை அணியில் மாற்றமா

மும்பை: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முக்கிய மாற்றம் ஏற்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

IND vs ZIM 1st ODI தோல்வி குறித்து Regis Chakabva வேதனை *Cricket

இந்திய அணி தற்போது ஜிம்பாப்வேவுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி வெற்றி

இந்திய அணி வெற்றி

முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களுக்கெல்லாம் 10 விக்கெட்களை இழந்து சுருண்டது. இந்த அணியின் தடுமாற்றத்திற்கு முக்கிய காரணம் தீபக் சஹார் தான். ஜிம்பாப்வே அணியின் முதல் 3 வீரர்களான இன்னசெண்ட் கையா (4), மருமானி (8), மாதேவெரே (5) ஆகியோரை தீபக் சஹார் தான் வீழ்த்தினார். அதுவும் பவர் ப்ளே ஓவரிலேயே சுருட்டினர்.

தீபக் சஹாரின் கம்பேக்

தீபக் சஹாரின் கம்பேக்

மொத்தமாக 7 ஓவர்களை வீசிய தீபக் சஹார் 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தினார். எகானமி ரேட் 3.90 ரன்களே ஆகும். காயம் காரணமாக நீண்ட நாட்களாக கிரிக்கெட் போட்டிகளிலேயே விளையாடாமல் இருந்த தீபக் சஹார் தனது முதல் போட்டியிலே சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார்.

ஆசிய கோப்பை வாய்ப்பு

ஆசிய கோப்பை வாய்ப்பு

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரிலும் அவருக்கான கதவுகள் திறக்கின்றன. ஆசிய கோப்பைக்கான அணியில் புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங் என மூன்று பேர் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தனர். புவனேஷ்வர் குமாரை தவிர்த்து மற்ற இருவரும் அனுபவம் இல்லாத வீரர்கள் என்பதால், பவுலிங்கில் மாற்றம் செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரி வந்தனர்.

பிசிசிஐ-ன் ஆலோசனை

பிசிசிஐ-ன் ஆலோசனை

தீபக் சஹார் பேக் அப் வீரராக மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தனர். தற்போது சிறப்பாக விளையாடி இருப்பதால், ஆவேஷ் கானை நீக்கிவிட்டு, தீபக் சஹாரை மெயின் அணியில் சேர்க்க பிசிசிஐ தேர்வுக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. ஆசிய கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அணியில் மாற்றம் செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, August 19, 2022, 12:14 [IST]
Other articles published on Aug 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+