For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“தேனிலவில் ஜாக்கிரதை..”.. தீபக் சஹாருக்காக, சகோதரி போட்ட ட்வீட்.. இணையத்தில் சிரிப்பலை!

மும்பை: தீபக் சஹாரின் திருமண வாழ்க்கை குறித்து அவரின் சகோதரி போட்டுள்ள ட்வீட் இணையத்தில் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக இருப்பவர் தீபக் சஹார்.

மெகா ஏலத்தில் ரூ.14 கோடிக்கு ஏலம் போய் ஆச்சரியப்பட வைத்த தீபக் சஹாரால், காயம் காரணமாக இந்தாண்டு விளையாட முடியாமல் போனது.

சோதனை நாட்கள்

சோதனை நாட்கள்

எனினும் இந்த சோதனை நேரத்திலும் மகிழ்ச்சி தருணமாக தீபக் சஹார் திருமணம் செய்துக்கொண்டுள்ளார். அவரின் நீண்ட நாள் காதலியான ஜெயா பரத்வாஜை கரம்பிடித்துள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் (ஜூன் 1) இருவரும் திருமணம் செய்துகொண்டனர். டெல்லி ஆக்ராவில் உள்ள ஜேபீ பேலஸ் ஹோட்டல் முழுவதும் புக் செய்யப்பட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்த திருமண நடைபெற்றிருக்கிறது.

 குவிந்த வாழ்த்துகள்

குவிந்த வாழ்த்துகள்

டெல்லியில் உள்ள ஐடிசி மயூரா ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிஎஸ்கே வீரர்கள், இந்திய அணி வீரர்கள் என பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பலரும் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர். இதுகுறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 சுவாரஸ்ய பதிவு

சுவாரஸ்ய பதிவு

இந்நிலையில் தீபக் சஹாருக்கு அவரின் சகோதரி மால்டி சஹார் போட்டுள்ள வாழ்த்து ட்வீட் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. புகைப்படத்தை போட்டுள்ள அவர், திருமண வாழ்த்துகள் தீபக் சஹார். தேனிலவின் போது, உங்கள் முதுகுப்பகுதியை பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் உலகக்கோப்பை வரவுள்ளது, காயம் ஏற்பட்டுவிடப்போகிறது என மால்டி சஹார் குறிப்பிட்டுள்ளார்.

நீடிக்கும் குழப்பம்

நீடிக்கும் குழப்பம்

தீபக் சஹார் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். அடுத்து வரக்கூடிய தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களில் தீபக் சஹாருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதே போன்று ஆசிய கோப்பையிலும் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

Story first published: Saturday, June 4, 2022, 18:00 [IST]
Other articles published on Jun 4, 2022
English summary
Deepak chahar sister malti chahar's tweet ( தீபக் சஹார் சகோதரி மால்டி சஹார் ட்வீட் ) தீபக் சஹாரின் திருமணத்திற்கு அவரின் சகோதரி மால்டி சஹாரின் ட்வீட் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+