For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிஷப் பண்ட் vs தீபக் சஹார்.. இந்திய ப்ளேயிங் 11 ஏற்பட்டுள்ள கடும் போட்டி.. காரணம் என்ன தெரியுமா??

மும்பை: தென்னாப்பிரிக்க அணியுடனான டி20 தொடரில் ரிஷப் பண்ட் மற்றும் தீபக் சஹார் இடையே போட்டி எழுந்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்கவுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெறும் கடைசி தொடர் இதுவென்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தென்னாப்பிரிக்க டி20 தொடர்

தென்னாப்பிரிக்க டி20 தொடர்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, தென்னாப்பிரிக்க தொடரில் சில மாற்றங்களுடன் களமிறங்குகிறது. அதாவது முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு மாற்று வீரர்களுடன் தான் ப்ளேயிங் 11 அமையும்.

ஹர்திக் பாண்ட்யா இல்லை

ஹர்திக் பாண்ட்யா இல்லை

பேட்டிங் வரிசையில் ஓப்பனிங்கில் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் உள்ளனர். இவர்களுக்கு அடுத்து விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் உறுதி செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஹர்திக் பாண்ட்யாவின் இடத்தில் யாரை தேர்வு செய்வார்கள் என்று தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் ஒரு வேகப்பந்துவீச்சாளருடன் கூடிய பேட்ஸ்மேன் தேவை.

ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு

ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு

அதிரடி பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்படலாம். ஆனால் அவரை சேர்த்தால் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்கள் என மொத்தமாக 5 பவுலர்களுடன் தான் களமிறங்க வேண்டியிருக்கும். விராட் கோலியை 6வது பவுலராக வைத்து ரிஸ்க் எடுக்கலாம். அப்படி இல்லையெனில் தீபக் சஹார் தான் இருக்கும் ஒரே வாய்ப்பு.

என்ன காரணம்

என்ன காரணம்

பவர் ப்ளே ஓவர்களில் விக்கெட் டேக்கிங் பவுலராக இருக்கும் தீபக் சஹார், பேட்டிங்கிலும் லோயர் ஆர்டரில் அதிரடி காட்டுவார். இந்திய அணிக்காக இதற்கு முன்னர் சில சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். டி20 உலகக்கோப்பை மெயின் அணியில் இருக்கும் பண்ட்-க்கு வாய்ப்பா அல்லது பேக் அப் வீரராக உள்ள தீபக் சாஹருக்கு வாய்ப்பா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Tuesday, September 27, 2022, 20:01 [IST]
Other articles published on Sep 27, 2022
English summary
Deepak chahar vs Rishabh pant Fight for hardik pandya place in India playing ahead of 1st T20 match against south africa
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+