Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒழுக்கமின்மை.. இளம் வீரருக்கு திடீரென விதிக்கப்பட்ட தடை.. பின்னணியில் மும்பை இந்தியன்ஸ் புள்ளி?!

டெல்லி: ஒழுக்கமின்மை காரணமாக பரோடா அணியின் இளம் வீரர் தீபக் ஹூடா தடை செய்யப்பட்டு இருக்கிறார். 2021ம் ஆண்டிற்கான முதல்தர போட்டிகளில் கலந்து கொள்வதில் இருந்து பரோடா அணி இவருக்கு தடை விதித்து உள்ளது.

சையது முஸ்டாக் அலி கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 10ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பெங்களூர், கொல்கத்தா, சென்னை, மும்பை, வாதோரா, இந்தூர், அஹமதாபாத் ஆகிய நகரங்களில் இந்த போட்டிகள் நடக்க உள்ளது.

இதில் மிக சிறிய பரோடா அணியும் கொஞ்சம் கவனம் ஈர்த்தது. அணிக்குள் ஏற்பட்ட பல்வேறு சர்ச்சைகள்தான் பரோடா அணி கவனம் ஈர்க்க காரணம்.

கவனம்

கவனம்

பரோடா அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் குர்னால் பாண்டியா இருக்கிறார்.இவர்தான் அணி தேர்வில் முக்கிய பந்து வகிக்கிறார். இவர் அணிக்குள் மற்ற வீரர்களை மோசமாக நடத்துவதாக புகார் எழுந்தது. இளம் வீரர்களை இவர் மோசமாக நடத்துகிறார் என்று புகார் வைக்கப்பட்டது.

புகார்

புகார்

முக்கியமாக அணியின் துணை கேப்டன் தீபக் ஹுடாவை இவர் தொடர்ந்து கிண்டல் செய்து மோசமாக நடத்தி இருக்கிறார். இவரின் தொல்லை தாங்க முடியாமல் பரோடா அணியில் இருந்தே தற்போது தீபக் ஹூடா வெளியேறிவிட்டார். சையது முஸ்தாக் கோப்பை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் தீபக் ஹூடா அணியில் இருந்தே வெளியேறினார்.

விசாரணை

விசாரணை

இதை தொடர்ந்து தீபக் ஹூடாவிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அவர் அணியில் இருந்து வெளியேறியது ஏன் என்று விளக்கம் கேட்கப்பட்டு இருந்தது. அதில் பயிற்சியின் போது குர்னால் பாண்டியா மிகவும் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாகவும், அவமானப்படுத்தியதாகவும் தீபக் ஹூடா தெரிவித்து உள்ளார்.

பிரச்சனை

பிரச்சனை

இந்த சம்பவம் பரோடா அணிக்குள் பெரிய பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விளக்கத்தை பரோடா அணி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஒழுக்கமின்மை காரணமாக பரோடா அணியின் இளம் வீரர் தீபக் ஹூடா தடை செய்யப்பட்டு இருக்கிறார். 2021ம் ஆண்டிற்கான முதல்தர போட்டிகளில் கலந்து கொள்வதில் இருந்து பரோடா அணி இவருக்கு தடை விதித்து உள்ளது.

Story first published: Friday, January 22, 2021, 21:41 [IST]
Other articles published on Jan 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+