For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹூடா கையை வச்சா ராங்கா போனது இல்ல.. உலக சாதனை படைத்த தீபக் ஹூடா.. முழு விவரம்

ஹராரே: சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்து 6 மாதம் மட்டுமே ஆன நிலையில், இந்திய அணி கிரிக்கெட் வீரர் தீபக் ஹுடா சாதனை ஒன்றை செய்துள்ளார்.

Recommended Video

IND vs ZIM 2nd ODI 5 விக்கெட் வித்தியாசத்தில் India அபார வெற்றி *Cricket

பொதுவாக யாரையாவது நாம் அதிர்ஷ்ட காரர் என்று சொல்வோம். இவர் இருந்தால் எல்லாம் சரி ஆயிடும் என்று கூறுவோம்.

அப்படி, ஒரு பெயரை தான் தீபக் ஹூடா பெற்றுள்ளார். அதாவது, அந்த பெயருக்காக கடுமையாக உழைத்துள்ளார். சரி, விஷயத்துக்கு வருவோம்.

அண்டர் 19 கிரிக்கெட்

அண்டர் 19 கிரிக்கெட்

தீபக் ஹூடாவுக்கு வயது 27 ஆகிவிட்டது. 2014ஆம் ஆண்டு அண்டர் 19 கிரிக்கெட்டில் விளையாடிய ஹூடாவுக்கு திறமை இருந்தும், வாய்ப்பு இல்லை. 130 கோடி மக்கள் இருக்கும் நாட்டில் 11 பேருக்கு இடம் கிடைப்பது என்றால், அதற்கு அதிர்ஷடமும் வேண்டும் அல்லவா. அது ஹூடாவுக்கு இல்லை என்று கிரிக்கெட் விமர்சகர்கள், ஏன் அவரது நண்பர்களே கூறி இருக்கின்றனர்.

8 ஆண்டுகள்

8 ஆண்டுகள்

இந்த நிலையில், விடா முயற்சி மூலம் தொடர்ந்து உழைத்து வந்த ஹுடாவுக்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம் கிடைத்தது. இதனால், தனக்கு கிடைத்த வாய்ப்பை இறுக்கமாக பிடித்து கொண்ட ஹூடா, பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கினார். இதன் மூலம் விராட் கோலிக்கே இந்திய அணியில் ஆபத்தாக தீபக் ஹூடா விளங்கினார்.

உலக சாதனை

உலக சாதனை

மேலும் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் ஹூடா சதம் விளாசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். இந்த நிலையில், தீபக் ஹுடா விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது. இதுவரை 9 டி20 மற்றும் 7 ஒருநாள் போட்டியில் ஹுடா விளையாடி இருக்கிறார்.

சாதனை பட்டியல்

சாதனை பட்டியல்

இதற்கு முன்பு ரோமேனிய வீரர் சத்விக் தொடர்ந்து 15 போட்டிகளில் விளையாடி ரோமேனிய அணி வென்று இருக்கிறது. இந்தப் பட்டியலில் தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் 13 வெற்றிகளுடன் 3வது இடமும், 13 வெற்றிகளுடன் ரோமேனிய வீரர் ஷாந்தனு 4வது இடமும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கோலிஸ் கிங் 12 வெற்றிகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

Story first published: Sunday, August 21, 2022, 16:06 [IST]
Other articles published on Aug 21, 2022
English summary
Deepak Hooda became Lucky Mascot for Team India and created world record
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+