Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீசிய முதல் பந்திலேயே விக்கெட்.. வேறு ஜெர்சியை அணிந்து விளையாடிய இந்திய வீரர்

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி பந்துவீச்சில் சற்று தடுமாறியது.

Recommended Video

IND vs WI ஆட்டத்தில் Deepak Hooda ஓவரில் முதல் பந்தே Wicket *Cricket
Deepak hooda claims First wicket in very first ball

டாஸ் வென்று முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீராகள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்.

குறிப்பாக அறிமுக போட்டியில் களமிறங்கிய ஆவேஷ் கான் ஓவரை, மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் குறிவைத்து அடித்தனர்.

முதல் ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ், இம்முறை கட்டுக்கோப்பாக பந்துவீசினார். வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர்கள் ஹோப் மற்றும் மெயர்ஸ் அதிரடியாக விளையாடினர். மெயர்ஸ் 23 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார். வேகப்பந்துவீச்சை இருவரும் சிறப்பாக கையாண்டதை அறிந்த ஷிகர் தவான், உடனே சுழற்பந்துவீச்சைளர்களை பயன்படுத்தினார்.

குறிப்பாக ஆல்ரவுண்டர் தீபக் ஹுடா, முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து சுழற்பந்துவீச்சை வைத்து ஆட்டத்தை தவான் நகர்த்த தொடங்கினார் இதற்கு நல்ல பலனும் கிடைத்தது.

இந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் பிரசித் கிருஷ்ணா விளையாடவில்லை. ஆனால், தீபக் ஹூடா, அவருடைய ஜெர்சியை அணிந்து விளையாடாமல், பிரசித் கிருஷ்வின் ஜெர்சியை அணிந்து விளையாடினார். இதனால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.

Story first published: Sunday, July 24, 2022, 21:51 [IST]
Other articles published on Jul 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+