தோனியை போல் ஒரு அதிர்ஷ்ட நாயகன்.. உலக சாதனை படைக்கப்போகும் தீபக் ஹூடா.. முழு விவரம்
ஹராரே: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் தீபக் ஹூடா, ஒரு உலக சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார்.
27 வயதான தீபக் ஹூடா, கடந்த பிப்ரவரி மாதம் தான் இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கினார்.
Recommended Video
அண்டர் 19 உலகக் கோப்பை, ரஞ்சி கிரிக்கெட் என ஐபிஎல் தொடர் என பலவற்றிலும் தனது திறமையை நிரூபித்த ஹூடாவுக்கு இந்திய அணியில் கிடைத்த வாய்ப்பு தாமதம் தான்.

உலக சாதனை
இருப்பினும், வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி கொண்ட தீபக் ஹூடாவுக்கு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம் கிடைத்தது. இந்த நிலையில், இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள ஜிம்பாப்வே தொடரில் தீபக் ஹூடாவுக்கு உலக சாதனையை சமன் செய்யும் அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதிர்ஷ்ட நாயகன்
பொதுவாக தோனியை தான் ரசிகர்கள், அதிர்ஷ்ட நாயகன் என்று பாராட்டி வருவார்கள். தொட்டது எல்லாம் தங்கமாகும் என்று கிரிக்கெட் விமர்சகர்களும் கூறுவார்கள். தற்போது அந்த பெயரை தீபக் ஹூடா பெற்றுள்ளார். ஆம், தீபக் ஹூடா இதுவரை 9 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளை இந்தியாவுக்காக விளையாடி இருக்கிறார்.

சாதனை விவரம்
இதில் ஒரு முறை கூட இந்திய அணி தோற்றது இல்லை. இதன் மூலம் தீபக் ஹுடா விளையாடிய 14 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது. இதனால் இன்றைய ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் போட்டியில் வென்றால், தொடர்ந்து 15 போட்டிகளை வென்று சாதனை படைப்பார். இதற்கு முன்பு ரோமேனிய வீரர் சத்விக் தொடர்ந்து 15 போட்டிகளில் விளையாடி ரோமேனிய அணி வென்று இருக்கிறது.

தீபக் ஹூடா
ஆனால், டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணி என்று பார்த்தால் அது தீபக் ஹூடா தான் முதல் இடம். இந்தப் பட்டியலில் தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் 13 வெற்றிகளுடன் 3வது இடமும், 13 வெற்றிகளுடன் ரோமேனிய வீரர் ஷாந்தனு 4வது இடமும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கோலிஸ் கிங் 12 வெற்றிகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications