Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தீபக் ஹூடா அடித்த ஆக்ரோஷ சிக்ஸர்.. ஒரு நொடியில் தப்பித்த கவாஸ்கர்.. மைதானத்தில் பரபரப்பு - வீடியோ!

சவுத்தாம்டன்: தீபக் ஹூடா அடித்த பந்து ஒன்று ரவி சாஸ்திரியின் மண்டையை பதம் பார்க்க சென்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 198 /8 ரன்களை குவித்தது. இதன்பின் ஆடிய இங்கிலாந்து அணி 148 ரன்களுக்கு சுருண்டது.

 இந்திய அணி வெற்றி

இந்திய அணி வெற்றி

இந்த போட்டியில் முன்னணி வீரர்கள் இன்றி களமிறங்கிய இந்திய அணி அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் பவர் ப்ளேவில் மட்டும் 66/2 ரன்களை குவித்து அசத்தியது. ரோகித் சர்மா அதிரடியாக 24 ரன்களுக்கு வெளியேறிய சூழலில் தீபக் ஹூடா மிடில் ஆர்டரில் இருந்து அணியை தூக்கி நிறுத்தினார்.

 ஹூடாவின் அதிரடி

ஹூடாவின் அதிரடி

முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய தீபக் ஹூடா 17 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இந்நிலையில் அவர் அடித்த 2 சிக்ஸர்களில் ஒன்று, மைதானத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் ரவி சாஸ்திரி அதிர்ஷ்டவசமாக தப்பியது தான்.

Recommended Video

T20 World Cup இந்திய அணியில் உள்ள பிரச்சனை Michael Vaughan கருத்து *Cricket
பரபரப்பு சம்பவம்

பரபரப்பு சம்பவம்

ஆட்டத்தின் 5வது ஓவரை மொயீன் அலி வீசினார். அவர் வீசிய முதல் பந்தை தீபக் ஹூடா தூக்கி அடிக்க, அந்த பந்து நேராக வர்ணணையாளர்கள் அமர்ந்திருந்த அறையை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றது. அப்போது அங்கு சுனில் கவாஸ்கர் மற்றும் மைக் ஏதர்டன் ஆகியோர் கமண்டேட்டரி செய்துக் கொண்டிருந்தனர்.

பரவும் வீடியோ

பந்து வருவதை அறிந்த அவர்கள் சரியான நேரத்தில் அங்கிருந்து விலகிவிட்டதால், எந்தவித காயமும் யாருக்கும் ஏற்படவில்லை. ஒரு நொடி நடந்த இந்த சம்பவத்தால் மைதானத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Story first published: Friday, July 8, 2022, 15:53 [IST]
Other articles published on Jul 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+