Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தீபக் ஹூடா செய்த தவறு.. இப்படி சுயநலமாக இருக்க கூடாது.. வெற்றி பெற்றதால் யாரும் கண்டுக்கல

டுபிளின்: அயர்லாந்துக்கு எதிராக 2வது டி20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நேற்று இந்திய அணி 250 ரன்களை அடித்திருக்க கூடும்.

ஆனால், பின்வரிசை வீரர்கள் அடித்து ஆட முற்பட்டு 18 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் டக் அவுட்டாகினர். இதனால் தான் இலக்கு 225 ரன்கள் என்ற அளவில் நின்றுவிட்டது.

தீபக் ஹூடா முடிவு

தீபக் ஹூடா முடிவு

இந்திய அணியில் இது போன்ற சரிவுகள் நடைபெறுவது முதல் முறை அல்ல. ஆனால் தற்போது அது பிரச்சினை இல்லை. தீபக் ஹூடா நேற்று சதம் அடித்து சாதனை படைத்தாலும், நேற்று அவர் கடைசி நேரத்தில் சுயநலமாக ஆடியதே உண்மை. டி20 அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் சதம் அடித்தே ஆக வேண்டும் என்று தீபக் ஹூடா முடிவு எடுத்தார்.

சதமடிக்க நேரம்

சதமடிக்க நேரம்

தீபக் ஹூடா 47 பந்துகளில் 92 ரன்கள் அடிக்க, அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அப்போது சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக தீபக் ஹூடா தனது அதிரடி ஆட்டத்திற்கு அவரே ஸ்பீட் பிரேக் போட்டு கொண்டார். இதனையடுத்து அடுத்த 8 ரன்களை சேர்க்க, அவர் 8 பந்துகளை எதிர்கொண்டார்.

250 ரன்கள் ஆகியிருக்கும்

250 ரன்கள் ஆகியிருக்கும்

இதனால் இந்தியாவின் ரன் குறைந்தது. அவர் சதத்தை பார்க்காமல் அணிக்காக விளையாடி இருந்தால், ரன்கள் இலக்கு 250 ஆக இருந்திருக்கும். அயர்லாந்துக்கும் ரன்களை துரத்தும் போது கூடுதல் நெருக்கடி ஏற்பட்டு இருக்கும். இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதால் , தீபக் ஹூடா செய்த தவறு தெரியவில்லை.

கேப்டன் தலையிட வேண்டும்

கேப்டன் தலையிட வேண்டும்

இதுவே இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக தீபக் ஹூடா இப்படி ஒரு காரியத்தை செய்து இருந்தால் தோல்விக்கு அதுவே முக்கிய காரணமாக அமைந்திருக்கும். இதனால் தீபக் ஹூடாவிடம் பயிற்சியாளரோ, கேப்டனோ பேசி, இது போன்ற தவறுகள் இனி நடைபெறாமல் இருக்க அறிவுறுத்த வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

Story first published: Wednesday, June 29, 2022, 17:33 [IST]
Other articles published on Jun 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+