ஒரே ஒரு மேட்ச் தான்.. டி20 கிரிக்கெட்டில் ஹூடா படைத்த சூப்பர் ரெக்கார்ட்.. ரசிகர்கள் வியப்பு!
மவுண்ட் மௌங்கனி: நியூசிலாந்து அணியுடனான 2வது டி20 போட்டியில் இந்திய அணி வீரர் தீபக் ஹூடா அட்டகாசமான சாதனையை படைத்துள்ளார்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 மழையினால் ரத்தான சூழலில் 2வது போட்டியில் இந்திய அணி வென்றது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.

இந்திய அணி வெற்றி
இந்திய அணியின் வெற்றிக்கு ஒருபுறம் சூர்யகுமார் யாதவின் சதம் காரணம் என்றால், மற்றொரு புறம் தீபக் ஹூடாவின் அட்டகாசமான பவுலிங் தான் காரணமாகும். கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக பவுலிங் வீச முடியவில்லை. இதனால் ஹூடாவுக்கு பவுலிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதனை அட்டகாசமாக பயன்படுத்திக்கொண்டார்.

என்ன ஆனது
வெறும் 2.5 ஓவர்களை மட்டுமே வீசிய அவர் 4 விக்கெட்களை கைப்பற்றி வெறும் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அவரின் வலையில் சிக்கி தான் நியூசிலாந்தின் முக்கிய வீரர்களான டேரில் மிட்செல், ஆடம் மில்னே, இஷ் சோதி, டிம் சௌதி என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் தான் நியூசிலாந்து அணி 126க்கு ஆல் அவுட்டானது.

புதிய சாதனை
இந்நிலையில் இதன் மூலம் புதிய சாதனை ஒன்றை ஹூடா படைத்துள்ளார். இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பவுலிங் ரெக்கார்ட் இதுதான் ஆகும். மிட்செல் சாண்ட்னர், டேனியல் விட்டோரி, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் மட்டும் தான் 4 விக்கெட்களை கைப்பற்றியிருந்தனர். தற்போது இந்தியாவின் சார்பில் ஹூடா அதில் இணைந்துள்ளார்.

இந்திய அணி ரெக்கார்ட்
இதே போல இந்திய வீரர் அக்ஷர் பட்டேலையும் ஹூடா முந்தியுள்ளார். நியூசிலாந்துடனான டி20 கிரிக்கெட்டில் இதுவரை அக்ஷர் பட்டேல் வீசிய 3 /9 என்பதே சிறந்ததாக இருந்தது. தற்போது தீபக் ஹூடா 4/10 என்ற ரெக்கார்டுடன் அதனை முந்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications