இங்கிலாந்தை ஓயிட் வாஷ் செய்த இந்திய மகளிர் அணி.. சர்ச்சையான ரன் அவுட்.. தீப்தி சர்மா செய்த சம்பவம்
லண்டன் : இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் இந்திய மகளிர் அணி முழுமையாக வென்று தொடரை கைப்பற்றியது.
Recommended Video
இந்தப் போட்டியுடன் இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதனால், அவரை வெற்றியுடன் வழி அனுப்பும் உத்வேகத்துடன் இந்திய வீராங்கனைகள் விளையாடினர். ஆனால் தலைப்பு செய்தியில் இடம் பிடித்ததோ தீப்தி சர்மா செய்த சம்பவம் தான்.

இந்தியா திணறல்
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஏமி ஜோன்ஸ் பந்துவீசசை தேர்வு செய்தார். இங்கிலாந்து வீராங்கனைகளின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல், இந்திய வீராங்கனைகள தடுமாறினர். செஃபாலி வர்மா, யாஷ்திகா பாட்டியா ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேற, கேப்டன் ஹர்மான்பிரித் கவுர் 4 ரன்களிலும், ஹர்லின் தியோல் 3 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

தீப்தி சர்மா அபாரம்
இதனால், இந்திய மகளிர் அணி 29 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இதனையடுத்து ஸ்மிருதி மந்தானாவுடன் ஜோடி சேர்ந்த தீப்தி சர்மா பொறுமையுடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஸ்மிருதி மந்தானா 50 ரன்களும், தீப்தி சர்மா 68 ரன்களும் அடிக்க மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறியதால், இந்திய அணி 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து சொதப்பல்
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணியும் இந்திய வீராங்கனைகளின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணியில் 6 வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததால அந்த அணி தடுமாறியது.

சர்ச்சையான ரன் அவுட்
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 39 பந்துகளில் 17 ரன்கள் தேவை, கைவசம் ஒரு விக்கெட் தான் இருந்தது. அப்போது தீப்தி சர்மா பந்துவீசுவதற்குள் , Non striker ஆக நின்ற டேவிஸ், கிரீஸை விட்டு வெளியேறினார். இதனால், உடனே தீப்தி சர்மா அவரை ரன் அவுட் செய்தார். இதனையடுத்து நடுவர், அதனை அவுட் என அறிவித்ததும் இந்தியா தொடரை 3க்கு 0 என்ற கணக்கில் வென்றது. தீப்தி சர்மாவின் இந்த நடவடிககையை இங்கிலாந்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications