Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் பரிதாபம்.... தொடர்ந்து 4வது தோல்வி!

திருநெல்வேலி: டிஎன்பிஎல் டி-20 கிரி்க்கெட் போட்டித் தொடரில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி தொடர்ந்து 4வது ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. நேற்று நடந்த ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் 53 ரன்களில் அபார வெற்றி பெற்றது.

டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்தது. இந்த நிலையில், லைகா கோவை கிங்ஸ் அணியுடன் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி மோதியது.

Defending champion chepauk super gillies suffered fourth defeat

முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. துவக்க ஆட்டக்காரரான ஷாருக் கான் 45 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 59 ரன்கள் விளாசினார்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் முகப்பு | அட்டவணை/முடிவுகள்

அபினவ் முகுந்த் 34, அந்தோணி தாஸ் 28 ரன்கள் எடுத்தனர். சேப்பாக் அணியின் பி.அருண், ஹரிஷ்குமார் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

புள்ளி பட்டியல்

அடுத்து விளையாடிய சேப்பாக் அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்த சீசனில் தொடர்ந்து 4வது ஆட்டத்திலும் சேப்பாக் தோல்வியடைந்தது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

சேப்பாக் அணியின் முருகன் அஸ்வின் 36, சசிதேவ் 23, கோபினாத் 14 ரனகள் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கோவை அணியின் மணிகண்டன் 3, விக்னேஷ், அஜித் ராம், டி.நடராஜன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

Story first published: Friday, July 27, 2018, 11:15 [IST]
Other articles published on Jul 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+