Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலககோப்பையிலிருந்து வெளியேறுகிறது நடப்பு சாம்பியன் இங்கிலாந்து? அரையிறுதிக்கு தகுதி பெற முடியுமா?

மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் ஆக களமிறங்கிய இங்கிலாந்து அணி இம்முறை மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என பலரும் கணித்திருந்தார்கள்.

ஆனால் இந்த கணிப்பு எல்லாம் பொய்யாக்கும் வகையில் இங்கிலாந்து அணி நடப்பு தொடரில் தடுமாறி வருகிறது. அந்த அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோஸ் திரும்பியும் இங்கிலாந்து அணி இன்று தென்னாப்பிரிக்காவிடம் 229 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியத் தழுவியது.

england team

இதன் மூலம் புள்ளி பட்டியலில் இங்கிலாந்து அணி ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது. விளையாடுகின்ற நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி மைனஸ் 1.24 என்று அளவில் இருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்து அணி இறுதிக்கு செல்ல முடியுமா என்பதை தற்போது பார்க்கலாம்.

அரை இறுதிக்கு செல்ல குறைந்தபட்சம் ஆறு முதல் 7 போட்டிகளாவது வெற்றி பெற்று இருக்க வேண்டும். தற்போது இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் தான் வெற்றி பெற்றிருக்கிறது. இன்னும் அவர்களுக்கு ஐந்து ஆட்டங்கள் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் இந்த ஐந்துளுமே வெற்றி பெற்றால் மட்டுமே இங்கிலாந்து அணியால் அரையிறுதி சுற்று குறித்து நினைத்துக்கூட பார்க்க முடியும்.

இந்த ஐந்திலும் அவர்கள் வெற்றி பெற்றால் 12 புள்ளிகளுடன் இருப்பார்கள். அப்போது மற்ற அணியின் தயவு இருந்தால் மட்டுமே அரை இறுதிக்கு செல்ல முடியும். இங்கிலாந்து அணி இன்னும் இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகளை எதிர்கொள்ள உள்ளது.

இதில் நெதர்லாந்து இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து வெற்றி பெற்றால் கூட இந்தியா ஆஸ்திரேலியா பாகிஸ்தானை எதிர்கொண்டு வெல்வது என்பது மிகவும் கடினமாக இருக்கும். இந்த ஐந்து போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தால் கூட வீட்டை நோக்கி செல்ல வேண்டியது தான். இதனால் இம்முறை இங்கிலாந்துக்கு அரை இறுதி வாய்ப்பு மிகவும் குறைவு.

Story first published: Sunday, October 22, 2023, 2:04 [IST]
Other articles published on Oct 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+