Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவ்வளவு நாள் எங்கய்யா இருந்த..?? தமிழக வீரரின் அசத்தல் பந்துவீச்சு..!! பைனலில் தமிழகம்..

சையது முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு 4வது முறையாக தமிழ்நாடு அணி தகுதி பெற்றுள்ளது.

நடப்பு சாம்பியனாக களமிறங்கிய தமிழ்நாடு அணி. டெல்லியில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது.

தமிழக பந்துவீச்சாளர் சரவணகுமார், 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தமிழ்நாட்டு அணியை வெற்றி பெற வைத்தார். தமிழ்நாடு அணி இறுதிப் போட்டியில் கர்நாடகா அல்லது விதர்பாவை எதிர்கொள்ள உள்ளது..

ஐதராபாத் அணி

ஐதராபாத் அணி

8808991... இது யாருடைய செல்போன் நம்பரும் அல்ல.. ஐதராபாத் அணி பேட்ஸ்மேன்களின் ஸ்கோர் கார்ட் தான். ஆம்.. நம்ப முடியவில்லையா,? இதற்கு காரணம் தமிழக அணியின் புதிய வேகப்பந்துவீச்சாளர் சரவணகுமார். டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி வீரர்களுக்கு ஆரம்பமே அதிர்ச்சிக்கரமாக அமைந்தது. தொடக்க வீரர் அகர்வால் 1 ரன்னிலும், ரெட்டி 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

சரவணகுமார்

சரவணகுமார்

32 வயதான தமிழக வீரர் சரவணகுமார் தற்போது தான் 3வது டி20 போட்டியை தமிழக அணிக்காக விளையாடுகிறார். சரவணகுமார் தொடர்ந்து தனது பந்துவீச்சு மூலம் எழுப்பிய கேள்விகளுக்கு விடை தெரியாமல் திணறினர் ஐதராபாத் அணி வீரர்கள். வந்த வேகத்தில், அனைவரும் பெவிலியன் திரும்ப, தியாகராஜன் என்பவர் மட்டும் 25 ரன்கள் எடுத்தார். இதனால் ஐதராபாத் அணி 90 ரன்களில் சுருண்டது. 3.3 ஓவர்கள் வீசிய சரவணகுமார்,21 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.. இதனால் இவ்வளவு நாள் நீ எங்கய்யா இருந்த என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

தமிழ் நாடு

தமிழ் நாடு

தமிழ் நாடு அணியின் பேட்டிங்கும் தொடக்கத்தில் சற்று தடுமாறியது. ஹரி நிஷாந்த் 14 ரன்களிலும், ஜெகதீசன் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க, தமிழ்நாடு அணி 16 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் விஜய் சங்கர், சுதர்சன் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் தமிழக அணி 14.2வது ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. விஜய்சங்கர் 43 ரன்களும், சுதர்சன் 34 ரன்களும் எடுத்திருந்தனர்.

Recommended Video

Why Suryakumar Yadav to be No.3 Batter? | IND vs NZ | OneIndia Tamil
இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

இதன் மூலம் சையது முஸ்தாக் அலி கோப்பை தொடரின் இறதிப் போட்டிக்கு 4வது முறையாக தமிழ்நாடு அணி தகுதி பெற்றுள்ளது. 2 முறை சாம்பியனான தமிழ் நாடு அணி இறுதிப் போட்டியில் கர்நாடகா அல்லது விதர்பாஅணியை எதிர்கொள்ள உள்ளது

Story first published: Saturday, November 20, 2021, 17:45 [IST]
Other articles published on Nov 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+