Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவை வீழ்த்தியாச்சு... புள்ளிகள் பட்டியலிலும் முதலிடத்தை பிடிச்சாச்சு

அபுதாபி: அபுதாபியில் நடைபெற்ற நேற்றைய 34வது ஐபிஎல் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டெல்லி கேபிடல்ஸ் அணி வீழ்த்தியுள்ளது.

இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியை பின்னுக்கு தள்ளி மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் அணி ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இதனிடையே, நேற்றைய ஆர்சிபி -ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெற்றுள்ள ஆர்சிபி ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து 3வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

முதலிடத்தில் டெல்லி கேபிடல்ஸ்

முதலிடத்தில் டெல்லி கேபிடல்ஸ்

நேற்றைய ஐபிஎல்லின் 34வது போட்டியில் சிஎஸ்கேவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வீழ்த்தியுள்ளது. அந்த அணியின் ஷிகர் தவான் அபாரமாக விளையாடி தன்னுடைய அணியை வெற்றிப் பாதையில் கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை டெல்லி கேபிடல்ஸ் அணி பிடித்துள்ளது.

3வது இடத்தில் ஆர்சிபி

3வது இடத்தில் ஆர்சிபி

இந்நிலையில் நேற்யை ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து 3வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது ஆர்சிபி. அந்த அணியின ஏபி டீ வில்லியர்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

சிஎஸ்கே 6வது இடம்

சிஎஸ்கே 6வது இடம்

ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5வது இடத்திலும் சிஎஸ்கே 6வது இடத்திலும் உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7வது இடத்திலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8வது இடத்திலும் உள்ளன. இந்நிலையில் இன்று அபுதாபியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் போட்டி நடைபெறவுள்ளது.

கே.எல். ராகுல் முதலிடம்

கே.எல். ராகுல் முதலிடம்

சிஎஸ்கேவிற்கு எதிராக நேற்று பௌலிங் போட்ட காகிசோ ரபடா, 19 விக்கெட்டுகளுடன் பர்ப்பிள் கேப்பை தொடர்ந்து கைவசப்படுத்திக் கொண்டுள்ளார். இதேபோல, கே.எல். ராகுல் 448 ரன்களுடன் பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ள நிலையில், அவரது சக வீரர் மயங்க் அகர்வால் 384 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் பாப் டூ பிளசிஸ் 3வது மற்றும் ஷிகர் தவான் 4வது இடத்திலும் உள்ளனர்.

Story first published: Sunday, October 18, 2020, 11:58 [IST]
Other articles published on Oct 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+