For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

VIDEO:அதுக்குள்ள அவசரம்..! முந்திக்கொண்டு டாஸ் போட முயன்ற ஸ்ரேயாஸ் அய்யர்.. தடுத்த மஞ்சரேக்கர்

விசாகப்பட்டினம்:ஹைதராபாத் அணிக்கு எதிரான ப்ளே ஆப் சுற்றில், முந்திக் கொண்டு டாஸ் போட முயன்ற டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரை, சஞ்சய் மஞ்சரேக்கர் தடுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே எலிமினேட்டர் சுற்றுப்போட்டி நடைபெற்றது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில்,டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

Delhi capitals captain shreyas iyer very eager to toss, video goes viral

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் அணி வீரர்கள், சீரான இடை வெளியில் தங்களது விக்கெட்டுகளை இழந்தது. குப்தில் மற்றும் மணிஷ் பாண்டே ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 36 ரன்களில் குப்தில் அவுட் ஆக, 30 ரன்களில் பாண்டேவும் வெளியேறினார்.

Delhi capitals captain shreyas iyer very eager to toss, video goes viral

விஜய் ஷங்கரின் இறுதிகட்ட அதிரடியால் அணியின் ஸ்கோர் சற்று உயர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு சன்ரைசர்ஸ் அணி 162 ரன்கள் எடுத்தது. இதனிடையே போட்டி ஆரம்பிக்கும் முன்பு நிகழ்ந்த ஒரு சுவாரசியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

டாஸ் போடுவதற்காக இரு அணி கேப்டன்களும் களத்தில் நின்று கொண்டு இருந்தார்கள்.அவர்களுடன் களத்தில் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனை செய்து கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத நிலையில், டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் டாஸ் போட்டார். உடனே மஞ்ச்ரேக்கர் அதனை தடுக்க... மைதானத்தில் சிரிப்பலை அடங்க சிறிது நேரமானது.

Story first published: Wednesday, May 8, 2019, 23:55 [IST]
Other articles published on May 8, 2019
English summary
Delhi capitals captain shreyas iyer very eager to toss, video goes viral.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+