Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

DC vs KXIP: சபாஷ்… சரியான போட்டி… அங்க கெயில்… இங்க தவான்… அரைசதம் கடந்து அபாரம்

டெல்லி: பஞ்சாப் அணி நிர்ணயித்த 164 ரன்களை நோக்கி களம் இறங்கியுள்ள டெல்லி அணியில் தவான் அதிரடி ஆடி அரைசதம் அடித்தார்.

ஐபிஎல் தொடரில் 37வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பஞ்சாப் அணி களம் இறங்கியது. 20 ஓவர்களில் அந்த அணி 163 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கெயில் 69 ரன்கள் குவித்தார்.

துவக்க வீரர்கள்

துவக்க வீரர்கள்

அதன் பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் கண்டது டெல்லி. துவக்க வீரர்களாக பிரித்வி ஷாவும், தவானும் களம் இறங்கினர்.

பிரித்வி ஷா அவுட்

பிரித்வி ஷா அவுட்

அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா... 13 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தார் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்.

ரன்கள் குவிப்பு

ரன்கள் குவிப்பு

தவான் வழக்கத்துக்கு மாறாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு இணையாக ஸ்ரேயாசும் ஆட.. ரன்கள் வந்து விழுந்தன. இந்த ஜோடியை பிரிக்க பஞ்சாப் பவுலர்கள் எவ்வளவோ முயன்றனர்.

அரைசதம் அடித்த தவான்

அரைசதம் அடித்த தவான்

ஆனால்... பலனில்லை. ஒரு ஓவருக்கு 8 முதல் 9 ரன்களை இந்த ஜோடி குவித்தது. சிறப்பாக ஆடிய தவான்... அருமையாக அரைசதம் அடித்தார். விக்கெட்டுகளை எடுத்தால் மட்டுமே பஞ்சாப் வெற்றி பெறும்.

Story first published: Saturday, April 20, 2019, 23:19 [IST]
Other articles published on Apr 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+