For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காயங்களால் அவதி... இருந்தாலும் முதலிடத்தை பிடிச்சே தீருவோம்... சபதத்தில் டெல்லி அணி

துபாய் : 30வது லீக் போட்டியில் நேற்று துபாயில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்ட டெல்லி கேபிடல்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஷிகர் தவான் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அரைசதங்கள் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளது.

இதையடுத்து ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் அந்த அணி தற்போது முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது டெல்லி கேபிடல்ஸ்.

முதலிடத்திற்கு கடும் போட்டி

முதலிடத்திற்கு கடும் போட்டி

முதலிடத்தில் டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி இந்த அணிகளுக்குத்தான் கடுமையான போட்டி இந்த சீசனில் ஏற்பட்டுள்ளது. மூன்று அணிகளும் ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெறும்போதும் முதலிடத்தை பிடிப்பதும், அடுத்த போட்டியில் மற்ற அணி மல்லுகட்டுவதாகவும் போகிறது.

முதலிடத்தில் டெல்லி கேபிடல்ஸ்

முதலிடத்தில் டெல்லி கேபிடல்ஸ்

இந்நிலையில் நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் இந்த பட்டியலில் முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது டெல்லி கேபிடல்ஸ்.

காயங்களால் அணி வீரர்கள் அவதி

காயங்களால் அணி வீரர்கள் அவதி

அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷிகர் தவான் அடித்துள்ள அரைசதங்கள் அந்த அணியின் நேற்றைய வெற்றிக்கு காரணமாக உள்ள நிலையில், 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் வீரர்கள் தொடர்ந்து காயங்களால் அவதியுற்றுள்ள நிலையிலும், தொடர் வெற்றிகளை பெற்று தந்து அணியை பெருமை கொள்ள செய்து வருகின்றனர்.

இரண்டாவது இடத்தில் ஆர்ச்சர்

இரண்டாவது இடத்தில் ஆர்ச்சர்

இந்நிலையில் அந்த அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் நேற்றைய போட்டியில் 19 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பௌலர்கள் வரிசையில் காகிசோ ரபடாவை அடுத்து இரண்டாவதாக இடம்பிடித்துள்ளார். ரபடா 18 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

Story first published: Thursday, October 15, 2020, 12:52 [IST]
Other articles published on Oct 15, 2020
English summary
DC are now above Mumbai Indians and Royal Challengers Bangalore
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+