Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கலக்கல் வெற்றிகள்... முதலிடத்திற்கு முன்னேறிய டெல்லி கேபிடல்ஸ்

ஷார்ஜா : ஷார்ஜாவில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணி ஐபிஎல் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் மூன்று வெற்றியை இந்த அணி பெற்றுள்ளதையடுத்து முதலிடத்தை பிடித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று விளையாடி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

சிறப்பான போட்டிகள்

சிறப்பான போட்டிகள்

ஐபிஎல் போட்டிகள் 2020 கடந்த மாதம் 19ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் ரசிகர்களுக்கு வித்தியாசமான போட்டிகளை வழங்கி வருகிறது ஐபிஎல் தொடர். மைதானத்தில் நேரில் சென்று உற்சாகத்தை அனுபவிக்க முடியாத குறை ஒன்றை தவிர்த்து மற்றபடி சிறப்பாக போட்டிகளை நடத்தி வருகிறது பிசிசிஐ.

முதலிடத்தில் டெல்லி கேபிடல்ஸ்

முதலிடத்தில் டெல்லி கேபிடல்ஸ்

கடந்த இரு வாரங்களாக ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்நிலையில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று ஐபிஎல் பட்டியலில் முதலிடத்தை டெல்லி கேபிடல்ஸ் அணி பிடித்துள்ளது. நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றி கொண்டு முதலிடத்தை பிடித்துள்ளது அந்த அணி.

புள்ளிகள் அடிப்படையில் 2வது இடம்

புள்ளிகள் அடிப்படையில் 2வது இடம்

இந்நிலையில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டு ஆர்சிபி அணி இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இரண்டு அணிகளும் 3 வெற்றிகளை பெற்றுள்ள போதிலும் புள்ளிகள் அடிப்படையில் டெல்லி கேபிடல்ஸ் முதலிடத்தில் உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5வது இடம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5வது இடம்

ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தலா 4 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6வது இடத்திலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5வது இடத்திலும் உள்ளன.

246 ரன்களுடன் முதலிடம்

246 ரன்களுடன் முதலிடம்

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் தலா ஒரு வெற்றியை மட்டுமே பெற்று பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளன. 246 ரன்களுடன் மயங்க் அகர்வால் ஐபிஎல் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நிலையில், 3 அரைசதங்களை அடித்து தேவ்தத் படிக்கல் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 38 பந்துகளில் 88 ரன்களை அடித்துள்ளார்.

ரபடாவும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

ரபடாவும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சஹல், இந்த சீசனில் 8 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன்மூலம் முகமது ஷமியிடம் இருந்து பர்ப்பள் கேப்பை அவர் பெற்றுள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணியின் ரபடாவும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Story first published: Sunday, October 4, 2020, 23:23 [IST]
Other articles published on Oct 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+