பிரித்வி ஷாவை அவமானப்படுத்திய டெல்லி அணி.. துணை கேப்டன் விவகாரத்தில் சர்ச்சை.. உண்மையில் பாவம் தான்
மும்பை : 2018 ஆம் ஆண்டு அண்டர் 19 அணியின் கேப்டனாக இந்தியாவுக்கு உலக கோப்பையை வென்று தந்தவர் பிரித்வி ஷா. பெரிய நட்சத்திர வீரராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது
இந்த நிலையில் தொடரும் காயம், தடை செய்யப்பட்ட மருந்தை எடுத்து கொண்டது போன்ற காரணங்களால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி முச்சதகங்கள் எல்லாம் அடித்த பிறகு தற்போது இந்திய அணியில் சேர்க்கப்பட்டாலும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

கேப்டன்
இதனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் உத்வேகத்துடன் ப்ரித்வி ஷா இருக்கிறார். இதனிடையே ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்ட்க்கு கார் விபத்து காரணமாக காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் நடப்பு தொடரில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை கேப்டன்
இதனை அடுத்து ரிஷப் பண்டிற்கு பதில் டேவிட் வார்னர் கேப்டனாக செயல்படுவார் என டெல்லி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.இதனை அடுத்து துணை கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. ஏற்கனவே கேப்டன் அனுபவத்தை பெற்றுள்ள பிரித்வி ஷாக்குதான் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணியின் கேப்டனாகவும் கடந்த ஆண்டு பிரித்வி ஷா செயல்பட்டு இருக்கிறார்.

ஆல்ரவுண்டருக்கு வாய்ப்பு
ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் 29 வயதான ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேலை துணை கேப்டனாக நியமித்து டெல்லி அணி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் டெல்லி அணியின் முக்கிய வீரராக அக்சர் பட்டேல் விளங்கி வருகிறார். தற்போது பேட்டிங்கிலும் அபாரமாக விளையாடி வரும் அக்சர் பட்டேல் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.

விரக்தியில் பிரித்வி ஷா
இதனால் மனதளவில் அக்சர் பட்டேல் பலமாக விளங்குவார் என்ற காரணத்தினால் அவரை துணை கேப்டனாக டெல்லி அணி நியமித்துள்ளது. இது பிரித்வி ஷாவை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. பிரித்வி ஷா பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கிற்கும் ஏற்கனவே சில மன கருத்து வேறுபாடு இருந்தன. பிரித்வி ஷா தீவிர பயிற்சி மேற்கொள்வது இல்லை என ரிக்கி பாண்டிங் ஏற்கனவே அவரை குறை கூறிய நிலையில் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications