For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

CSK vs DC: பிரித்வி ஷா, தவான், முன்ரோ, ஸ்ரேயாஸ் அவுட்... சென்னைக்கு எதிராக திணறும் டெல்லி

Recommended Video

IPL 2019: Chennai vs Delhi | சென்னைக்கு 148 ரன்கள் பிளாக்கை நிர்ணயித்தது டெல்லி

விசாகப்பட்டினம்:ஐபிஎல் குவாலிபயர் 2 போட்டியில் சென்னை அணியின் பந்துவீச்சில் சிக்கிய டெல்லி அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்துள்ளது.

1
45948

இறுதிச்சுற்றுக்குச் செல்லும் குவாலிஃபயர் 2 சுற்று இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. அதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்கிசும், டெல்லி கேப்பிடல்சும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Delhi capitals losses early wickets against chennai super kings

சென்னை அணியில் முரளி விஜய் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 6 ஆண்டுகள் பிறகு ப்ளே ஆப் சுற்றுக்கு வந்திருக்கும் டெல்லி அணியில் கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் களம் இறங்கினர்.

முதலில் பேட்டிங்கில் இறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக இளம் வீரர் பிரித்வி ஷாவும், தவானும் களம் இறங்கினர். பெரும் ரன்குவிப்பு இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், 3வது ஓவரில் பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து, தவானுடன் முன்ரோ கை கோர்த்தார்.

ஸ்கோர் 37 ரன்களாக இருந்த போது தவான், ஹர்பஜன் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார். 37 ரன்களுக்குள் தொடக்க ஜோடி பெவிலியன் திரும்பியதால் டெல்லி அணி அதிர்ச்சி அடைந்தது. இதையடுத்து, முன்ரோவுடன், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் களம் கண்டார்.

நன்றாக ஆடிக் கொண்டிருந்த முன்ரோ, 27 ரன்களில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் 13 ரன்களில் வெளியேறினார். முக்கிய விக்கெட்டுகள் பறி போனதால், டெல்லி அணியின் ரன்விகிதம் குறைந்தது. அதிக ரன்கள் குவித்தால் மட்டுமே வெற்றியை பற்றி நினைத்து பார்க்க முடியும் என்பதால் டெல்லி அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

Story first published: Friday, May 10, 2019, 20:34 [IST]
Other articles published on May 10, 2019
English summary
Delhi capitals losses early wickets against Chennai super kings.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+