SRH vs DC: ஹைதராபாத் பந்துவீச்சில் பிரித்வி ஷா, தவான் அவுட்… முன்ரோ, ஸ்ரேயாஸ் அதிரடி
ஹைதராபாத்:ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் களம் இறங்கிய டெல்லி தொடக்க விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
ஹைதராபாதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயோன போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷாவும், தவானும் களம் இறங்கினர்.
முதல் ஓவரில் எந்த பிரச்னையும் இல்லை. 2வது ஓவரின் 5வது பந்தில் பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். அதன் பின்னர் 4வது ஓவரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தவான் 7 ரன்களில் வெளியேறினர்.

தவான் வெளியேற்றம்
டெல்லி அணியின் தொடக்க வீரர்களின் விக்கெட்டுகளை அகமது கைப்பற்றினார். தவான் வெளியேறிய பிறகு, முன்ரோ, ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி கைகோர்த்தது. முன்ரோ ஹைதராபாத் பந்துவீச்சை பதம் பார்த்தார்.

முன்ரோ அவுட்
4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என விளாசிக் கொண்டிருந்த அவர், 40 ரன்களில் அபிஷேக் சர்மா பந்தில் வீழ்ந்தார். ரன் ரேட் அதிகமாக இருந்தாலும்... அணியில் முக்கிய விக்கெட்டுகளை டெல்லி அணி இழந்துள்ளது.

தோல்வி
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக துவங்கிய ஹைதராபாத் அணி பின்னர் அடுத்தடுத்து இது தோல்விகளை சந்தித்து குறிப்பாக மும்பை அணியிடம் 96 ரன்களுக்கு சுருண்டது. அடுத்ததாக பஞ்சாப் அணியிடம் நடுத்தர பேட்டிங் வீரர்கள் ரன்கள் அடிக்க முடியாமல் திணறியதால் தோல்வியை தழுவியது.

வெல்வது நன்று
இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. டெல்லிக்கு இந்த ஆண்டு இதுவரை ஒரு சிறப்பான தொடராக அமைந்துள்ளது. 7 போட்டிகளில் 4 போட்டிகளை வென்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இதனால் இரு அணிகளும் இன்றைய போட்டியில் வென்றால், புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதுடன் முக்கியமான 2 புள்ளிகள் கிடைக்கும்

யார்? யார்?
சன்ரைஸ் ஹைதராபாத்: டேவிட் வார்னர், ஜானி பைர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், விஜய் ஷங்கர், ரிக்கி புய், தீபக் ஹூடா, ரஷீத் கான், அபிஷேக் சர்மா, புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா, கே காலேல் அகமது

அணி விவரம்
டெல்லி கேப்பிடல்ஸ்: பிருத்வி ஷா, ஷிகார் தவான், கொலின் முர்ரோ, ஷ்ரியாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பன்ட் (கீப்பர்), கிறிஸ் மோரிஸ், ஆக்ஸார் படேல், அமித் மிஸ்ரா, கீமோ பால், ககிஸோ ரபாடா, இஷாந்த் சர்மா.


Click it and Unblock the Notifications