ஐபிஎல் தொடரில் வருகிறது மாற்றம்..! அணி மாறும் அந்த அசத்தல் வீரர்..? வலை வீசிய டெல்லி கேப்பிடல்ஸ்
மும்பை: டெல்லி கேபிடள்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னாள் கேப்டனும், அந்த அணியின் நட்சத்திர வீரருமான ரகானேவை அணிக்குள் கொண்டு வர தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறது.
12 ஐபிஎல் சீசன்கள் இதுவரை முடிந்துள்ளன. ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய 3 அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை.
ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட சாம்பியனாகாத டெல்லி கேபிடள்ஸ் முதன் முறையாக கோப்பையை வெல்லும் தீவிரத்தில் உள்ளது. தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் என்ற ஜாம்பவான் இருப்பது பத்தாது என்று கருதிய நிர்வாகம், கடந்த சீசனில் கங்குலியை ஆலோசகராக நியமித்தது.

வெளியேற்றுதல் சுற்று
அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இளம் டெல்லி கேபிடள்ஸ் அணி, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. வெளியேற்றுதல் சுற்றிலும் வென்று, 2வது தகுதிச் சுற்றில் சிஎஸ்கேவிடம் தோற்றது.

அசத்தல் திட்டம்
இந்நிலையில், அடுத்த சீசனிலாவது கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி திட்டம் வகுத்து வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னாள் கேப்டனும், அந்த அணியின் நட்சத்திர வீரருமான ரகானேவை வாங்குவதில் முனைப்பாக இருக்கிறது.

மறைமுக பேச்சுவார்த்தை
ரகானே ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தார். தொடர் தோல்விகள் காரணமாக திடீரென கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரை அணிக்குள் கொண்டு வருவது குறித்து ராஜஸ்தான் ராயல்சிடம் டெல்லி பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளிவந்துள்ளது. கூடிய விரைவில் அது முழுமை அடைந்துவிடும் என்று தெரிகிறது.

தவான் வந்தது எப்படி?
கடந்த ஆண்டு தவானை சன் ரைசர்ஸ் அணியிலிருந்து கொண்டு வந்தது டெல்லி கேப்பிடல்ஸ். அவர் 521 ரன்களை 5 அரைசதங்களுடன் எடுத்து அசத்தினார். அதன் காரணமாகவே 2012க்கு பிறகு டெல்லி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.

விளையாடிய அணிகள்
2008, 2009ல் மும்பை இந்தியன்சுக்காக களம் இறங்கினார் ரகானே. 2010ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. 2011-ல் ராஜஸ்தான் ராயல்சுடன் இணைந்தார். ராஜஸ்தான் தடை செய்யப்பட்ட போது புனேக்கு சென்றார். இப்போது டெல்லி கேப்பிடல்ஸ் ரகானே அணிக்குள் கொண்டு வலை விரித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications