Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நல்லா ஆடியும் இப்படியா? 2023 ஐபிஎல்-காக டெல்லி அணி முதல் நடவடிக்கை.. ஷர்துல் தாக்கூருக்கு துரோகம்!!

மும்பை: டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து நட்சத்திர ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இதில் தீவிர கவனத்தை செலுத்தி வரும் நேரத்தில் ஐபிஎல் தொடர் குறித்து பிசிசிஐ மெகா அப்டேட்டை கொடுத்தது.

நடப்பு டி20 உலககோப்பையில் முதல் சதம்.. 52 பந்துகளில் தென்னாப்பிரிக்க வீரர் சதம்.. ஆனாலும் ஒரு தவறு

வீரர்கள் ஏலம்

வீரர்கள் ஏலம்

அதாவது 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 16ம் தேதியன்று நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வரும் நவம்பர் 15ம் தேதிக்குள்ளாக சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது இருந்தே அனைத்து அணிகளிலும் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

டெல்லி எடுத்த முடிவு

டெல்லி எடுத்த முடிவு

இந்நிலையில் இந்த ஏலத்திற்கான முதல் நடவடிக்கையை டெல்லி கேப்பிடல்ஸ் நிறுவனம் எடுத்துள்ளது. அதாவது அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதே போல அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் கே.எஸ்.பரத்-ம் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய தொகை

பெரிய தொகை

சிஎஸ்கே அணிக்காக அட்டகாசமாக செயல்பட்டு வந்த ஷர்துல் தாக்கூரை கடந்தாண்டு மெகா ஏலத்தின் போது போட்டிப்போட்டு வாங்கியது டெல்லி அணி. அதுவும் ரூ. 10.75 கோடிக்கு ஏலம் எடுத்து அதிர்ச்சி கொடுத்தது. ஆனால் அவரின் செயல்பாட்டில் திருப்தியடையாத டெல்லி அணி நிர்வாகம் தற்போது அவரை கழட்டிவிட முடிவெடுத்துள்ளது.

ஷர்துல் ஸ்கோர்

ஷர்துல் ஸ்கோர்

2022ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய ஷர்துல் தாக்கூர் பவுலிங்கில் 15 விக்கெட்களை கைப்பற்றினார். ஆனால் எகானமி 10 ரன்களுக்கும் மேலாக வாரி வழங்கினார். பேட்டிங்கை பொறுத்தவரையில் 120 ரன்களை அடித்திருந்தார்.

கூடுதல் சலுகை

கூடுதல் சலுகை

கடந்த சீசனில் ஐபிஎல் மெகா ஏலம் நடந்த சூழலில் அடுத்த சீசனுக்கு மினி ஏலம் மட்டுமே நடைபெறும். கடந்த ஏலத்தின் போது ஒவ்வொரு அணியும் தலா ரூ.90 கோடி செலவளித்துக்கொள்ளலாம் என அனுமதி தரப்பட்டது. ஆனால் அடுத்த சீசனுக்கான மினி ஏலத்தில் கூடுதலாக ரூ.5 கோடி சேர்க்கப்பட்டு ரூ.95 கோடி செலவளித்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

Story first published: Thursday, October 27, 2022, 14:05 [IST]
Other articles published on Oct 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+