SRH vs DC: தொடக்க விக்கெட்டுகள் இழப்பு... முன்ரோ, ஸ்ரேயாஸ் அபாரம்... 155 ரன்கள் எடுத்த டெல்லி
ஹைதராபாத்:ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் களம் இறங்கிய டெல்லி வெற்றி இலக்காக 156 ரன்களை நிர்ணயித்துள்ளது.
ஹைதராபாதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயோன போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தெர்வு செய்துள்ளது. இதையடுத்து டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷாவும், தவானும் களம் இறங்கினர்.
முதல் ஓவரில் எந்த பிரச்னையும் இல்லை. 2வது ஓவரின் 5வது பந்தில் பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். அதன் பின்னர் 4வது ஓவரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தவான் 7 ரன்களில் வெளியேறினர்.

தவான் வெளியேற்றம்
டெல்லி அணியின் தொடக்க வீரர்களின் விக்கெட்டுகளை அகமது கைப்பற்றினார். தவான் வெளியேறிய பிறகு, முன்ரோ, ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி கைகோர்த்தது. முன்ரோ ஹைதராபாத் பந்துவீச்சை பதம் பார்த்தார்.

முன்ரோ அவுட்
4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என விளாசிக் கொண்டிருந்த அவர், 40 ரன்களில் அபிஷேக் சர்மா பந்தில் வீழ்ந்தார். அதன் பின்னர் ஸ்ரேயாஸ் அய்யருடன் கைகோர்த்தவர் ரிஷப் பன்ட். இருவரும் ஓரளவு ரன்களை எடுக்க தொடங்கினர்.

ஸ்ரேயாஸ் 45 ரன்கள்
அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த ஸ்ரேயாஸ் அய்யர் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பன்ட்டும் 23 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன் பின்னர் அணியின் ரன் விகிதம் குறைந்தது.

வெற்றி இலக்கு
பின்வரிசை வீரர்கள் சரியாக சோபிக்காததால் பெரிய இலக்கை எட்டும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 155 ரன்களை எடுத்துள்ளது. 156 ரன்கள் வெற்றி இலக்கு என்பதால் ஹைதராபாத் அணி எளிதாக வெற்றி பெறும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications