For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

DC vs RCB: தவான், ஸ்ரேயாஸ் அதிரடி அரைசதம்… 187 ரன்களை குவித்து திணறடித்த டெல்லி

டெல்லி:பெங்களூரு அணிக்கு, முதலில் பேட் செய்த டெல்லி அணி 188 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

2008 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், இந்த ஆண்டுக்கான 12வது தொடர் துவங்கி தற்போது நடக்கிறது. டெல்லியில் நடக்கும் 46வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

அதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். டெல்லி கேபிடல்ஸ் அணியில் கிறிஸ் மோரிசுக்கு பதிலாக லாமிச்சான்னே சேர்க்கப்பட்டார். பெங்களூரு அணியில் மொயின் அலி, சவுத்தி, அக்ஸ்தீப் ஆகியோருக்கு பதிலாக கிளாசன், டூபே, குர்கீரத் சிங் வாய்ப்பு பெற்றனர்.

பிரித்வி ஆட்டமிழப்பு

பிரித்வி ஆட்டமிழப்பு

இதையடுத்து, டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் துவக்க வீரர்களாக தவான், பிரித்வி ஷா ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் முதல் ஓவரில் 5 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். அதன்பின்னர் அடித்து ஆட தொடங்கினர்.

தவானுடன் ஜோடி

தவானுடன் ஜோடி

ஆனால், 4வது ஓவரில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து 2வது விக்கெட்டுக்கு தவானுடன் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கை கோர்த்தார்.

தவான் 50 ரன்கள்

தவான் 50 ரன்கள்

இருவரும் அற்புதமாக ஆடினர். ரன் ரேட்டும் அதிரடியாக உயர்ந்தது. அடித்து ஆடிய தவான் 50 ரன்கள் குவித்து அசத்தினார். அவர் சாஹல் பந்தில் அவுட்டானார்.

ஸ்ரேயாஸ் 52 ரன்கள்

ஸ்ரேயாஸ் 52 ரன்கள்

அவரை தொடர்ந்து வந்த பன்ட் 7 ரன்கள் மட்டும் தான் எடுத்தார். ஆனால் மறுமுனையில் களத்தில் நின்ற கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 52 ரன்கள் குவித்தார். அவரும் 16வது ஓவரில் வெளியேறினார்.

குறைந்த ரன்ரேட்

குறைந்த ரன்ரேட்

இங்ராமும் 11 ரன்கள் போதும் என்ற மனநிலையில் ஆட்டமிழக்க, ரன் ரேட் குறைந்து 150 ரன்களை வரை டெல்லி அணி எடுக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது.

187 ரன்கள் குவிப்பு

187 ரன்கள் குவிப்பு

ஆனால் இறுதிக்கட்டத்தில் ரூதர்போர்டும், அக்சர் படேலும் அடித்த ஆட ரன்கள் வந்து கொண்டிருந்தன. முடிவில் 20 ஓவர்களில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.

Story first published: Sunday, April 28, 2019, 18:14 [IST]
Other articles published on Apr 28, 2019
English summary
Delhi Capitals scored 187 runs against Royal challengers Bangalore.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X