Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜோராக ஆரம்பித்து.. பேஜாராக முடித்த ஹைதராபாத்… 116 ரன்களில் மடமடவென்று சரிந்து தோல்வி

ஹைதராபாத்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரர்கள் வார்னரும், பெயர் ஸ்டோவும் அதிரடியாக ரன்களை குவித்த போதிலும், அனைத்து விக்கெட்டுகளை 116 ரன்களில் இழந்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது ஹைதராபாத்.

ஹைதராபாதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயோன போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தெர்வு செய்துள்ளது. இதையடுத்து, களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 155 ரன்கள் எடுத்தது.

பிரித்வி ஷா, தவான் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். அடுத்து வந்த முன்ரோ, அதிரடியாக ஆடி 40 ரன்கள் குவித்தார். 156 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கியது ஹைதராபாத்.

பறந்த பந்துகள்

பறந்த பந்துகள்

தொடக்க வீரர்களாக அதிரடி மன்னன் வார்னரும், பெயர்ஸ்டோவும் களம் கண்டனர். இருவரும் ஒரு முடிவுடன் வந்திருப்பது ஆட்டத்தின் தொடக்கத்திலே தெரிந்தது. ஆரம்பம் முதலே டெல்லி பந்துவீச்சை வெளுத்தனர். ஒரு கட்டத்தில் 50 ரன்களை ஹைதராபாத் அணி குறுகிய ஓவர்களிலேயே கடந்தது.

பெயர்ஸ்டோவ் அவுட்

பெயர்ஸ்டோவ் அவுட்

டெல்லி அணியின் பந்துவீச்சுக்கு 10வது ஓவரில் பலன் கிடைத்தது. அரை சதத்தை நெருங்கி கொண்டிருந்த பெயர்ஸ்டோவ் 41 ரன்களில் வெளியேறினார். 2வது விக்கெட்டுக்கு வார்னருடன் கைகோர்த்தார் கேப்டன் வில்லியம்சன். ஆனால்... வெறும் 3 ரன்களில் அவரும் ஆட்டமிழந்தார்.

வார்னர் ஆட்டமிழப்பு

வார்னர் ஆட்டமிழப்பு

அவர் தொடங்கி வைத்ததை பின் வந்தவர்கள் அட்சரம் பிசகாமல் பின்பற்றினர். ரிக்கி புயி 7 ரன்களில் வெளியேறினார். அதற்கு அடுத்த ஓவரில். அரைசதம் அடித்து ஆடிக் கொண்டிருந்த வார்னர் ஆட்டமிழந்தார்.

ஆட்டத்தின் திருப்புமுனை

ஆட்டத்தின் திருப்புமுனை

ஆட்டத்தின் திருப்புமுனை விக்கெட் என்று அதனை சொல்லலாம். இதையடுத்து, ஆஹா.. ஓஹோ என்று பலரும் புகழும் விஜய் சங்கர் களத்துக்கு வந்தார். சந்தித்த பந்து 2.. எடுத்த ரன்னோ ஒன்று... வந்த வேகத்திலே நடையை கட்டினார்.

3 விக்கெட்டுகள்

3 விக்கெட்டுகள்

அந்த நிமிடத்தில் இருந்தே ஆட்டம் டெல்லி அணிக்கு கைமாறியது நன்றாகவே தெரிந்தது. மோரிஸ் வீசிய 17வது ஓவரில் 3 விக்கெட்டுகள் விழுந்தன. ஹூடா, அபிஷேக் சர்மா, ரஷித் கான். இரண்டே ஓவர்களில் ஹைதராபாதின் ஒட்டு மொத்த கதையே மாறிவிட்டது.

116 ரன்களில் ஆல் அவுட்

116 ரன்களில் ஆல் அவுட்

18 ஓவர்கள் முடிவில் 112 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் இருக்க.. கிட்டத்தட்ட ஹைதரா பாத்துக்கு தோல்வி உறுதி ஆனது. 19வது ஓவரில் மிச்சம் இருந்த 2 விக்கெட்டுகளையும் ரபாடா அள்ள... 116 ரன்களில் ஆல் அவுட்டானது ஹைதராபாத்.

டெல்லி வெற்றி

டெல்லி வெற்றி

ஒரு கட்டத்தில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ஹைதராபாத் அணி 15 ஓவர்களுக்கு பிறகு... தடுமாறி தோல்வியை சந்தித்தது. கடைசி வரை நம்பிக்கையுடன் விளையாடிய டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

Story first published: Monday, April 15, 2019, 0:21 [IST]
Other articles published on Apr 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+