Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட.. போங்கப்பா…!! இந்த மேட்சிலும் தோற்ற கோலியின் பெங்களூரு.. 4 விக். வித்தியாசத்தில் வென்ற டெல்லி

Recommended Video

என்ன ஆச்சு பெங்களூரு அணியினருக்கு ? டெல்லியிடமும் தோல்வி

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக தோற்ற வந்த பெங்களூரு அணி, டெல்லி அணியிடமும் தோற்று போனது.

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

1
45896

அதன்படி, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பார்த்தீவ் படேல்,கேப்டன் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். பார்த்தீவ் (9), டி வில்லியர்ஸ் (17), ஸ்டோயினிஸ் (15) ஆகியோர் விரைவில் வெளியேறினர். அடுத்து வந்த மொயின் அலி அதிரடியாக 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

150 ரன்கள் இலக்கு

150 ரன்கள் இலக்கு

பொறுப்புடன் விளையாடிய கோலி 33 பந்துகளில் 41 ரன்களில் எடுத்து அவுட்டானார். அதிக ரன்கள் சேர்க்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க... இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டக் அவுட் தவான்

டக் அவுட் தவான்

பின்னர் 150 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி அதிரடியாக விளையாடியது. தொடக்க வீரர்களாக பிரித்வி ஷாவும், மீசை முறுக்கி தவானும் களத்துக்கு வந்தனர். வந்த அதே வேகத்தில் டக் அவுட்டாகி வெளியேறினார் தவான்.

ஒரே ஓவரில் 5 பவுண்டரிகள்

ஒரே ஓவரில் 5 பவுண்டரிகள்

அதன்பிறகு, பிரித்வி ஷாவுடன் கை கோர்த்தார் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர். 3வது ஓவரில் பிரித்வி ஷா அடித்த பவுண்டரிகள் அபார ரகம். முதல் பந்தில் பவுண்டரி, 2வது பந்தில் பவுண்டரி என 5 பந்துகளில் பவுண்டரிகளாக வெளுத்தார் பிரித்வி ஷா.

போராடிய பெங்களூரு

போராடிய பெங்களூரு

விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே வெற்றியை தனதாக்கி கொள்ளும் என்ற நினைத்த பெங்களூரு அணி அதற்காக போராடியது. நன்றாக ஆடிய பிரித்வி ஷா 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இங்ராம் வெளியேற்றம்

இங்ராம் வெளியேற்றம்

கோலிக்கு ஓரளவு நம்பிக்கை பிறந்தது. அதன் பின்னர் வந்த இங்ராம் அதிரடியாக ஆடினார். 21 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அவர் வெளியேறினார். டெல்லி அணி 14 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்திருந்தது.

கோலிக்கு ஏமாற்றம்

கோலிக்கு ஏமாற்றம்

களத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம் கடந்து வலுவான பார்மில் இருந்தார். அணியின் ஸ்கோர் 145 ஆக இருந்த போது தான் அவர் ஆட்டமிழந்தார். கடைசி நேர மாயாஜாலம் ஏதேனும் நடக்காதா என்று எதிர்பார்த்திருந்த கோலி அண்ட் கோவுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.

அடுத்தடுத்து விக்கெட்டுகள்

அடுத்தடுத்து விக்கெட்டுகள்

ஒரு கட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர், பண்ட், மோரிஸ் என அடுத்தடுத்து இறுதி கட்டங்களில் ஆட்டமிழக்க.. ஆட்டம் பெங்களூரு பக்கம் திரும்புவது போல இருந்தது. ஆனால்... பலன் ஏதும் இல்லை.

டெல்லி அணி வெற்றி

டெல்லி அணி வெற்றி

19வது ஓவரில் 152 ரன்களை எடுத்து டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை தோற்கடித்தது. இதுவரை தாம் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தவிர... வேறு எதையும் சந்திக்காத பெங்களூரு இந்த போட்டியிலும் தோற்று போனது.

Story first published: Sunday, April 7, 2019, 23:21 [IST]
Other articles published on Apr 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+