Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி

DC vs KXIP: தவான், ஸ்ரேயாஸ் அரைசதம் அடித்து அபாரம்... நின்று, நிதானமாக பஞ்சாபை வென்ற டெல்லி

டெல்லி: பஞ்சாப் அணி நிர்ணயித்த 164 ரன்களை நோக்கி களம் இறங்கிய டெல்லி, தவான் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் அரை சதத்தால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் 37வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பஞ்சாப் அணி களம் இறங்கியது. 20 ஓவர்களில் அந்த அணி 163 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கெயில் 69 ரன்கள் குவித்தார்.

துவக்க வீரர்கள்

துவக்க வீரர்கள்

அதன் பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் கண்டது டெல்லி. துவக்க வீரர்களாக பிரித்வி ஷாவும், தவானும் களம் இறங்கினர்.

பிரித்வி ஷா அவுட்

பிரித்வி ஷா அவுட்

அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா... 13 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தார் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்.

ரன்கள் குவிப்பு

ரன்கள் குவிப்பு

தவான் வழக்கத்துக்கு மாறாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு இணையாக ஸ்ரேயாசும் ஆட.. ரன்கள் வந்து சேர்ந்தன. இந்த ஜோடியை பிரிக்க பஞ்சாப் பவுலர்கள் எவ்வளவோ முயன்றனர்.

அரைசதம் அடித்த தவான்

அரைசதம் அடித்த தவான்

சிறப்பாக ஆடிய தவான்... அருமையாக அரைசதம் அடித்தார். ஆனால்... அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 56 ரன்கள் எடுத்த அவர் ஆட்டம் இழந்தார்.

அபார ஆட்டம்

அபார ஆட்டம்

இதையடுத்து, ஸ்ரேயாசுடன் கைகோர்த்த சாம் கர்ரன் 6 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து இங்ராமும் ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், ஸ்ரேயாஸ் ரன்கள் குவித்தார்.

டெல்லி வெற்றி

டெல்லி வெற்றி

மிக நிதானமாக ஆடிய ஸ்ரேயாஸ் 58 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்து, அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். முடிவில் டெல்லி அணி 166 ரன்களை எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபை வெற்றி கண்டது.

Story first published: Sunday, April 21, 2019, 0:42 [IST]
Other articles published on Apr 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+