Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KKR vs DC : 3 ரன்களில் சதத்தை கோட்டை விட்ட தவான்… ஆனாலும் டெல்லி அசத்தல் வெற்றி

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான முக்கிய போட்டியில் அபாரமாக ஆடிய டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொல்கத்தாவில் 26வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. 2 வாரத்துக்கு முன் இதே அணிகள் மோதிய போது சூப்பர் ஓவரில் டெல்லியிடம் கொல்கத்தா தோல்வி அடைந்தது.

1
45902

டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். கொல்கத்தா அணியில் சுனில் நரைனுக்கு, பதிலாக கார்லோஸ் பிராத்வெயிட் அணியில் சேர்க்கப்பட்டார்.

முதல்பந்தில் டக்

முதல்பந்தில் டக்

இதையடுத்து, முதலில் கொல்கத்தா களம் இறங்கியது. இஷாந்த் சர்மா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே டென்லி டக் அவுட் ஆனார். முதல் ஓவரே மெயிடன் விக்கெட் ஆனது.

179 ரன்கள் இலக்கு

179 ரன்கள் இலக்கு

அதனையடுத்து, சுப்மன் கில், உத்தப்பா ஜோடி சேர்ந்து அடித்து விளையாடினர். உத்தப்பா 28 ரன்களிலும், ராணா 11 ரன்னிலும் நடையைக் கட்டினார். சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் 39 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். ரசல் அதிரடியாக ஆட.. கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது.

14 ரன்களில் ஆட்டமிழப்பு

14 ரன்களில் ஆட்டமிழப்பு

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீர்களாக பிரித்வி ஷாவும், மீசை முறுக்கி மன்னன் தவானும் வந்தனர். 14 ரன்கள் எடுத்த பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களில் வெளியேறினார்.

6 ஓவர்களில் விக்கெட்டுகள்

6 ஓவர்களில் விக்கெட்டுகள்

6 ஓவர்களுக்குள் 2 விக்கெட்டுகள் என்ற நிலைமையில் இருந்து தவானும், ரிஷப் பன்டும் மீட்க முயன்றனர். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. இந்த ஜோடியை பிரிக்கும் கொல்கத்தாவின் முயற்சி பலிக்கவில்லை.

அருமையாக ஆடிய தவான்

அருமையாக ஆடிய தவான்

3வது விக்கெட்டுக்கு இருவரும் 105 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். ஸ்கோர் 162 ரன்கள் இருக்கும் போது பன்ட் ஆட்டமிழந்தார். அடித்து ஆடிக் கொண்டிருந்த தவான் சதம் அடிப்பார் என்று அனைவரும் எதிர் பார்த்திருந்தனர்.

காத்திருந்த ரசிகர்கள்

காத்திருந்த ரசிகர்கள்

ஆனால்.. ரிஷப் பன்ட்டை தொடர்ந்து களத்துக்கு வந்த இங்ராம் அதை தட்டி பறித்துவிட்டார் என்றே சொல்லலாம். ஒரு கட்டத்தில் பந்துகளை விட ரன்கள் அதிகமாக இருந்தது. இந்த சூழ்நிலையில் சதம் அடித்து, அணியை தவான் வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்த்திருந்தனர்.

வெற்றி பெற்ற டெல்லி

வெற்றி பெற்ற டெல்லி

ஆனால்... 6 பந்துகள் விளையாடிய இங்ராம் 14 ரன்கள் எடுத்தார். 19வது ஓவரில் 12 பந்துகள் 12 ரன்கள் என்ற நிலைமை இருந்தது. ஆனால்.. அந்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க.. டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.

தவான் ஆட்ட நாயகன்

தவான் ஆட்ட நாயகன்

63 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த தவான்... சதம் எடுக்காமல் கோட்டை விட்டார். சதத்தை அடிக்காவிட்டாலும்.. ஆட்ட நாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

Story first published: Saturday, April 13, 2019, 0:29 [IST]
Other articles published on Apr 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+