RCB vs DC: பெங்களூருக்கு எதிரான போட்டி... டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச்சு
Recommended Video

பெங்களூரு:ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.
மொத்தம் 56 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடரில் இதுவரை 19 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. 20வது போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி எதிர்கொள்கின்றன.
இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த போட்டியிலாவது வெற்றி பெற்று வெற்றி கணக்கை துவங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. டிவில்லியர்ஸ், கோலி போன்ற வீரர்கள் இருந்த போதிலும் பெங்களூரு படுதோல்விகளை சந்தித்து வருகிறது.

ரசிகர்கள் வெறுப்பர்
இளம் படையான டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான போட்டியிலும் பெங்களூர் அணி தோல்வியடையும் பட்சத்தில் தனது சொந்த ரசிகர்களாலேயே வெறுக்கப் படும் நிலைக்கு பெங்களூரு தள்ளப்படும்.

இளம் வீரர்கள் அணி
டெல்லி அணியையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. இளம் வீரர்கள் கொண்ட படையாக அந்த அணி காட்சியளிக்கிறது. எனவே பேட்டிங், பவுலிங்கில் பெங்களூரு அணிக்கு இணையாக இருக்கும் என்று தெரிகிறது.

பவுலிங்
பெங்களூருவில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இதையடுத்து, பெங்களுரு அணி முதலில் பேட் செய்கிறது.

வீரர்கள் விவரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி (கேப்டன்), ஏபி டி வில்லியர்ஸ், மார்கஸ் ஸ்டோனெனிஸ், மொயின் அலி, அக்ஷ்திப் நாத், பவன் நெகி, டிம் சௌதி, நவடிப் சைனி, யூசுந்தர சாஹல், முகமது சிராஜ்.

யார்? யார்?
டெல்லி கேப்பிடல்ஸ்: ப்ரித்வி ஷா, ஷிகார் தவான், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பன்ட் (விக்கெட்), கொலின் இங்ராம், ராகுல் டிவாடியா, கிறிஸ் மோரிஸ், அக்சார் படேல், கிகிஸோ ரபாடா, இஷாந்த் சர்மா


Click it and Unblock the Notifications