Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2023: டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ்.. டேவிட் வார்னர் முடிவு என்ன?

லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

16வது ஐபிஎல் சீசன் கோலகலமாக நேற்று தொடங்கியது. இன்றைய நாளின் இரண்டாவது போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியை எதிர்த்து டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணி விளையாடுகிறது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி டேவிட் வார்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனால் வலிமை வாய்ந்த பேட்டிங் வரிசை கொண்ட லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Delhi Capitals won the toss and choose to Field against Lucknow in IPL 2023

டாஸ் வென்ற பின் டேவிட் வார்னர் பேசுகையில், லக்னோ மைதானத்தில் அதிகளவில் கிரிக்கெட் விளையாடியதில்லை. அதனால் பிட்ச் குறித்து அறிந்துகொள்ளவே பந்துவீச்சை தேர்வு செய்தோம். இந்த பிட்ச் பார்க்கும் போது சிறிது குழப்பமாக உள்ளது. இம்பேக்ட் பிளேயர் விதிமுறைகள் சிறிது பயத்தை பதற்றத்தையும் அளிக்கிறது. அதேபோல் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் மகிழ்ச்சி தான். எங்களின் சிறந்த ஆட்டத்தை ரிஷப் பண்டிற்காக ஆடுவோம் என்று தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் லக்னோ அணிக்காக கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன், மார்க் வுட் மற்றும் ஜெய்தேவ் உனாத்கட் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். இதுகுறித்து கே.எல்.ராகுல் கூறுகையில், ஒவ்வொரு அணியும் சொந்த மண்ணை கோட்டை போல் வைத்துக் கொள்ள விரும்புவார்கள். அப்படிதான் ஐபிஎல் ஆடப்பட்டு வருகிறது. இதுவரை நாங்களும் லக்னோ பிட்ச்சில் ஆடியதில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் விளையாடுகிறோம். என்னை பொறுத்தவரை பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

லக்னோ அணி விவரம்: கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், தீபக் ஹூடா, குருணால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, மார்க் வுட், ஜெய்தேவ் உனாத்கட், ரவி பிஷ்னாய், ஆவேஷ் கான்

இம்பேக்ட் பிளேயர்ஸ்: டேனியல் சாம்ஸ், அமித் மிஸ்ரா, ப்ரீரெக், யாஷ் தாகூர், கவுதம்

டெல்லி அணி விவரம்: டேவிட் வார்னர், பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரைலி ரூசவ், சர்ஃபராஸ் கான், ரோவ்மன் பவல், அக்சர் படேல், குல்தீப் யாதவ், சேத்தன் சக்காரியா, கலீல் அஹ்மத், முகேஷ் குமார்.

இம்பேக்ட் பிளேயர்ஸ்: மனீஷ் பாண்டே, பிரவீன் தூபே, அமன் கான், லலித் யாதவ், அபிஷேக் போரல்

Story first published: Saturday, April 1, 2023, 19:10 [IST]
Other articles published on Apr 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+