
வாய்ப்பு பெற்ற வீரர்கள்
பெங்களூரு அணியில் மொயின் அலி, சவுத்தி, அக்ஸ்தீப் ஆகியோருக்கு பதிலாக கிளாசன், டூபே, குர்கீரத் சிங் வாய்ப்பு பெற்றனர். இரு அணிகளுக்கு மிக முக்கியமான போட்டி என்பதால் ரசிகர்கள் பரபரப்பில் உள்ளனர்.

யார்? யார்?
டெல்லி கேபிடல்ஸ் அணி விவரம்: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பன்ட், ரூதர்போர்டு , கோலின் இங்ராம், அக்ஷர் படேல், காகிசோ ரபாடா, சந்தீப் லாமிச்சான்னே, அமித் மிஸ்ரா,இஷாந்த் சர்மா

அணி விவரம்
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விவரம்: பார்த்தீவ் படேல், விராட் கோலி, டி வில்லியர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், ஹென்ரிச் கிளாசன், சிவம் டூபே, குர்கீரத் சிங், வாஷிங்டன் சுந்தர், நவ்தீல் சாய்னி, உமேஷ் யாதவ், சகால்.

தொடக்கமே அதிரடி
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் துவக்க வீரர்களாக தவான், பிரித்வி ஷா ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் முதல் ஓவரில் 5 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். அதன்பின்னர் அடித்து ஆட தொடங்கினர்.

ஷா ஆட்டமிழந்தார்
அதிலும் பிரித்வி ஷா கிடைத்த பந்துகளை வெளுக்கும் முடிவிலேயே பேட்டை வீசியது தெரிந்தது. ஆனால், 4வது ஓவரில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். 5 ஓவர்களிலேயே டெல்லி 52 ரன்களை எடுத்திருந்தது.

3வது இடத்தில் டெல்லி
ஐபிஎல் தொடரில் டெல்லி அணி 7 வெற்றி, 4 தோல்வி என 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி 4 வெற்றி, 7 தோல்வி என 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

22 முறை நேருக்கு, நேர்
டெல்லி, பெங்களூரு அணிகள் இதுவரை 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளது. இதில் பெங்களூரு அணி 14 போட்டிகளிலும், டெல்லி அணி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டி டிராவில் முடிந்துள்ளது.

யாருக்கு பிளே ஆப்?
இன்றைய போட்டி பெங்களூரு அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த போட்டியில் பெங்களூரு அணி தோல்வியடைந்தால் ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications