Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RR vs DC: டாஸ் வென்ற டெல்லி… பேட் செய்த ராஜஸ்தான்.. சாம்சன் டக் அவுட்.. ஆனாலும் வெளுக்கும் ரகானே

ஜெய்பூர்:டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரராக வந்த சஞ்சு சாம்சன் ரன் ஏதுமின்றி டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தாலும் ரகானே அதிரடியாக ஆடினார்.

ஐபிஎல் தொடரில் மொத்தம் 56 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 39 போட்டிகள் நிறைவடைந்துள்ளது. 40வது போட்டியான இன்றைய போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் களம் காண்கின்றன.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

மாற்றம் கிடையாது

மாற்றம் கிடையாது

இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டியில் களம் இறங்க உள்ளனர்.

சேர்ப்பு

சேர்ப்பு

அதே போல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் சந்தீப் லமிசன்னே நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக க்ரிஸ் மோரிஸ் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

அணி விவரம்

அணி விவரம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள்:

அஜிக்னியா ரஹானே, சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ரியான் பிராக், ஆஸ்டன் டர்னர், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரேயஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்சர்,ஜெயதேவ் உனாட்கட், தாவல் குல்கர்னே.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர்கள் விவரம்:

ப்ரிதீவ் ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், காலின் இன்கிராம், க்ரிஸ் மோரிஸ், ஸெர்ஃபேன் ரூத்தர்போர்டு, அக்ஷர் பட்டேல், காகிஷோ ரபாடா, அமித் மிஷ்ரா, இஷாந்த் சர்மா

சாம்சன் அவுட்

சாம்சன் அவுட்

முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களில் ஒருவரான சஞ்சு சாம்சன் 2வது ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட்டாகினர்.

ரகானே சூப்பர்

ரகானே சூப்பர்

அதன் பிறகு 2வது விக்கெட்டுக்கு ரகானேவுடன் களம் கண்டார் கேப்டன் ஸ்மித். ஒரு பக்கம் தொடக்க விக்கெட் விழுந்த அதிர்ச்சியில் ரசிகர்கள் இருக்க... அதை பற்றி கவலைப்படாமல் வெளுக்கு ஆரம்பித்தார் ரகானே.

5 ஓவர்களில் 47 ரன்கள்

5 ஓவர்களில் 47 ரன்கள்

பந்துகள் பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும் பறந்தன. முதல் ஓவர் முடிவில் 5 ரன்களை எடுத்திருந்த ராஜஸ்தான் அணி, 6 ஓவர்கள் முடிவில் 50 ரன்களை எளிதாக கடந்திருந்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் ஓவருக்கு சராசரியாக 10 ரன்களை அந்த அணி எடுத்தது.

Story first published: Monday, April 22, 2019, 21:36 [IST]
Other articles published on Apr 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+