Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

DC vs KXIP: ராகுல், மயங்க் அகர்வால் அவுட்... எதை பற்றியும் கவலைப்படாமல் வெளுக்கும் கெயில்

டெல்லி:ஐபிஎல் தொடரில் டாஸ் வென்றுள்ள டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, களம் இறங்கியுள்ள பஞ்சாப் அணி அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியுள்ளது.

ஐபிஎல் தொடரில் 37வது போட்டியான இன்றைய போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணி மூன்று மாற்றங்களுடன் களம் கண்டுள்ளது. காலின் இங்ராம், சந்தீப் லமிசன்னே மற்றும் ரூத்தர்போர்டு ஆகியோர் அணியில் உள்ளனர்.

3 மாற்றங்கள்

3 மாற்றங்கள்

அதே போல், பஞ்சாப் அணியும் இன்றைய போட்டியில் மூன்று மாற்றங்களுடன் களம் காண்கிறது. சாம் குர்ரேன் மீண்டும் பஞ்சாப் அணியில் இடம்பிடித்து உள்ளார்.

அதிரடியில் கெயில்

அதிரடியில் கெயில்

இதையடுத்து முதலில் பஞ்சாப் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ராகுலும், சிக்சர் மன்னன் கெயிலும் களம் கண்டனர். வழக்கம் போல அதிரடியை காட்டினார் கெய்ல்.

ஆட்டமிழந்தார் ராகுல்

ஆட்டமிழந்தார் ராகுல்

பந்துகளை பவுண்டரிகளுக்கும், சிக்சர்களுக்கும் விரட்டினார். ஆனால் மறுபுறமோ... ராகுல் 12 ரன்களில் லமிச்சானே பந்தில் ஆட்டமிழந்தார். கெயிலுடன் மயங்க் அகர்வால் களம் கண்டார். ஆனால் அவரும் 2 ரன்களில் நடையை கட்டினார்.

2 விக்கெட்டுகள் காலி

2 விக்கெட்டுகள் காலி

50 ரன்களை எடுப்பதற்குள் பஞ்சாப் அணி 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. ஆனால்... அதிரடி மன்னன் கெயிலை நம்பியே பஞ்சாப் இருப்பதால் அணியின் ஸ்கோர் நிச்சயம் உயரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Saturday, April 20, 2019, 21:05 [IST]
Other articles published on Apr 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+