Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷேவாக் அபார ஆட்டம்: ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்

அகமதாபாத்: வீரேந்திர ஷேவாக்கின் பிரமாதமான பேட்டிங்கால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்.

ஐபிஎல் தொடரில் இந்த அணி பெறும் தொடர்ந்த 2 வது வெற்றி இது.

நேற்று ஐபிஎல் தொடரில் ஒரு போட்டி மட்டுமே நடந்தது. அகமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் டெல்லியும், ராஜஸ்தானும் சந்தித்தன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய அஸ்னோத்கர் 5 ரன்களில் வெளியேற, ஸ்மித் 18 ரன்கள் சேர்த்துக் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ஓஜா 24 ரன்களை விளாசினார். மும்பைக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி சதம் போட்ட யூசுப் பதான் இந்தப் போட்டியில் முட்டை வாங்கி ஆட்டமிழந்தார்.

இருப்பினும் ஜூன்ஜூன்வாலா சற்று நிதானித்து ஆடி 53 ரன்களைச் சேர்த்து அணிக்கு கெளரவரமான ஸ்கோரை ஏற்படுத்தித் தந்தார். டோக்ராவின் பங்கு 26 பந்துகளில் 29 ரன்கள்.

இப்படித் தட்டுத் தடுமாறி ஆடிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 141 ரன்களுடன் நின்று போனது.

பின்னர் ஆடத் தொடங்கியது டெல்லி. ஷேவாக் நேற்று அபாரமாக ஆடினார். வெறும் 34 பந்துகளைச் சந்தித்த அவர் 75 ரன்களைக் குவித்து முனாப் படேல் பந்தில் ஆட்டமிழந்தார்.

சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷேவாக் 75 ரன்களுடன் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

கடந்த போட்டியில் கலக்கிய கம்பீர் இந்த முறை 9 ரன்களில் வீழ்ந்தார்.

பின்னர் வந்தவர்களில் திணேஷ் கார்த்திக் 23, டிவில்லியர்ஸ் 15 ரன்கள் சேர்த்தனர்.

இறுதியில் 17.1 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி.

ஆட்ட நாயகனாக ஷேவாக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு இது 2வது தொடர் வெற்றியாகும். ராஜஸ்தான் அணிக்கோ 2வது தொடர் தோல்வியாகும்.

ஐபிஎல் 3 - அணிகள் பெற்ற புள்ளிகள் விவரம்:

அணி - போட்டிகள்- வெற்றி - தோல்வி- முடிவில்லாதது- ரன் ரேட் - புள்ளிகள்

டெல்லி - 2 - 2 - 0 - 0 - (+0.709) - 4
கொல்கத்தா - 2 - 2 - 0 - 0 - (+0.426) - 4
ஹைதராபாத் - 2 - 1 - 1 - 0 - (+0.500) - 2
மும்பை - 1 - 1 - 0 - 0 -( +0.200) - 2
பஞ்சாப் - 1 - 0 - 1 - 0 - (-0.261) - 0
பெங்களூர் - 1 - 0 - 1 - 0 - (-0.284) - 0
ராஜஸ்தான் - 2 - 0 - 2- 0 - (-0.800) - 0
சென்னை - 1 - 0 - 1 - 0 - (-1.550) - 0

Story first published: Wednesday, December 7, 2011, 18:36 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+