பஞ்சாபை சுருட்டிய டெல்லிக்கு சொந்த மண்ணில் சோகம்... வெற்றி வாய்ப்பை தவறவிட்டது
Recommended Video

டெல்லி: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் டெல்லியில் நடந்த 22வது ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களுக்கு சுருண்டது. கடைசி பந்து வரை நடந்த பரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 21 ஆட்டங்கள் முடிந்துள்ளன. பெயரிலேயே கிங் வைத்துள்ள சிஎஸ்கே புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அதேபோல கிங் பெயரை வைத்துள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. மற்றவர்களை நடுங்க வைக்கும் பெயரை கொண்டுள்ள டெல்லி டேர்டெவில்ஸ் 2 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்த சீசனில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தனது சொந்த மண்ணில் ஒரு முறையும், எதிர் அணியின் சொந்த மண்ணில் ஒருமுறையும் விளையாடும்.

வலுவான நிலையில் பஞ்சாப்
அதன்படி இந்த சீசனின் 2-வது ஆட்டத்தில் மொகாலியில் பஞ்சாப் அணியுடன் டெல்லி அணி மோதியது. அதில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பஞ்சாப் இதுவரை 5 ஆட்டங்களில் 4ல் வென்றுள்ளது. ஒன்றில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது.

டெல்லி தொடர்ந்து தோல்வி
டெல்லி அணி இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. நான்கில் தோல்வி அடைந்துள்ளது. பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளிடம் தோல்வியடைந்த டெல்லி, மூன்றாவது ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தியது. அதன் பிறகு கொல்கத்தா, பெங்களூரு அணிகளிடம் தோல்வியடைந்தது.

வெற்றி கிடைக்குமா
இந்த நிலையில் இந்த சீசனில் பஞ்சாப், டெல்லி அணிகள் இரண்டாவது முறையாக மோதுகின்றன. கொலகத்தா அணியின் கேப்டனாக இரண்டு முறை கோப்பையை வென்று தந்த கவுதம் கம்பீர் டெல்லியின் கேப்டனாக உள்ளார். ஆனால் இந்த சீசனில் அவருடைய கேப்டன்சி எடுபடவில்லை.

பஞ்சாபை சுருட்டியது
தனது சொந்த மண்ணில் முதல் ஆட்டத்தில் விளையாடும் டெல்லி, டாஸை வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களுக்கு சுருண்டது. கருண் நாயர் 34, டேவிட் மில்லர் 26, லோகேஷ் ராகுல் 23 ரன்கள் எடுத்தனர். டெல்லியின் லியான் பிளங்கெட் 3 விக்கெட்களை வீழ்த்தினார். 144 ரன்கள் இலக்குடன் டெல்லி பேட்டிங் செய்தது.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழ, பார்த்திவ் ஷா 22, ராகுல் தவேடியா 24 ரன்கள் எடுத்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் தனி ஆளாக நின்று கடைசி பந்து வரை போராடி 57 ரன்கள் எடுத்தார். டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசியில், 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றது.


Click it and Unblock the Notifications