Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டேய் தங்கத்துரை! உனக்கு அவ்வளவு தான் மரியாதை.. ஒரே ஓவரில் 3 விக்கெட் இழந்த டெல்லி.. பாண்டிங் எரிச்சல்

ஐதராபாத் : ஐபிஎல் தொடரில் இன்று நீ வீக்கா, இல்லை நான் வீக்கா என்ற போட்டி புள்ளி பட்டியலில் கீழ் இருக்கும் ஐதராபாத், டெல்லி அணி மக்களிடையே மோதியது. இதில் வார் நீண்ட நாட்களுக்கு பிறகு ஐதராபாத்தில் விளையாடுகிறார் என்ற ஒரே எதிர்பார்ப்பு மட்டும் இந்த போட்டியில் இருந்தது.

இந்த நிலையில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே டெல்லி அணியின் பில் சால்ட், டக் அவுட்டாக, டெல்லி ரசிகர்களுக்கு படத்தின் கதை ஓபனிங் சீனிலேயே தெரிந்துவிட்டது.

Delhi lost 3 wickets in a single over made turning point vs SRH game

ஒரு பக்கம் டேவிட் பொறுமையாக விளையாடினாலும், மிட்செல் மார்ஷ் 5 பவுண்டரிகளை அடித்து ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார். ஆனால், தேர்தலில் நம்பிக்கையுடன் வாக்கு அளிக்கும் மக்களுக்கு என்ன கிடைக்குமோ, அது தான் டெல்லி அணி ரசிகர்களுக்கும் கிடைத்தது. ஆட்டத்தின் 7வது ஓவரில் டெல்லி அணியின் முக்கிய வீரர்களான வார்னர், சர்பிராஸ் கான், ஹக்கீம் ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

அதிலிருந்து, டெல்லி அணியின் இன்னிஙஸ் மீளவே இல்லை. அக்சர் பட்டேலும், மணிஷ் பாண்டேவும் தலா 34 ரன்களை எடுக்க, டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 144 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. இதில் புவனேஸ்வர் குமார் 4 ஓவரில் 11 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்டையும், வாசிங்டன் சுந்தர் 4 ஓவர் 28 ரன்களை விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறது.

Story first published: Monday, April 24, 2023, 21:39 [IST]
Other articles published on Apr 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+