Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

DC vs KKR - பேய்கள் நடமாடும் நேரத்தில் ஐபிஎல் போட்டி.. அதே திரில்லருடன் நடந்த ஆட்டம்.. வென்றது யார்?

டெல்லி : ஐபிஎல் லீக் தொடரில் தனது 6வது போட்டியில் களமிறங்கி முதல் வெற்றியை பதிவு செய்தது. கொல்கத்தாவுக்கு எதிரான இந்தப் போட்டி மழை காரணமாக சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

இரவு 8.15 மணிக்கு தான் டாஸ் போடப்பட்டது. இவ்வளவு நேரம் மழையால் பாதிக்கப்பட்டும், இரு அணிகளுக்கும் ஓவர் குறைக்காமல் போட்டியை நடத்துவதாக நடுவர்கள் அறிவித்தனர்.இதனால், போட்டி முடிய இரவு 12.25 மேல் ஆனது. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த ஆட்டத்தில் டெல்லி அணியில் இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டதன் மூலம் 2 ஆண்டுகளுக்கு பிறகு இஷாந்த் சர்மா ஐபிஎல் போட்டியில் விளையாடினார்.

dc vs kkr

மழை காரணமாக ஆடுகளமும் தோய்வாக இருந்ததாவ் , கொல்கத்தா அணி வீரர்கள் அடிக்கும் பந்து, மாமியார் வீட்டுக்கு செல்ல மறுக்கும் மருமகள் போல் பவுண்டரிக்கு செல்ல மறுத்தது. வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் 4 ரன்களிலும், கடந்த ஆட்டத்தில் சதம் விளாசிய வெங்கடேஷ் ஐயர் , இந்தப் போட்டியில் டக் அவுட் ஆனார். கேப்டன் நிதிஷ் ரானா 4 ரன்களிலும், மந்தீப் சிங் 12 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் 6 ரன்களில் வெளியேறினார்.

தொடக்க வீரர் ஜேசன் ராய் மட்டும் பொறுப்புடன் விளையாடி 39 பந்துகளில் 43 ரன்கள் சேர்க்க, இறுதியில் தனி ஆளாக போராடிய ஆண்டிரு ரஸில் 31 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் கேகேஆர் அணி 20 ஓவர் முடிவில் 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் பிரித்வி ஷா 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மிட்செல் மார்ஷ் 2 ரன்களிலும், பில் சால்ட் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் டேவிட் வார்னர் மட்டும் 11 பந்துகளை அடித்து 41 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார். எனினும் அவர் ஆட்டமிழந்த உடன், ஆட்டத்டிதல் மீண்டும் சரிவு ஏற்பட்டது. 15 ஓவரில் வெற்றி பெற வேண்டிய போட்டியில் டெல்லி அணி 4 பந்துகள் எஞ்சிய நிலையில் தான் வென்றது. இதன் மூலம் முதல் வெற்றியை டெல்லி பெற்றது.

Story first published: Friday, April 21, 2023, 0:41 [IST]
Other articles published on Apr 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+