Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்.. டெல்லியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூர்!

டெல்லி: ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி, பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

Delhi Vs Bangalore; Virat Kohli slams 30th IPL fifty

இதையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோஹ்லி 58 ரன்களும், கெய்ல் 48 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

டெல்லி அணியின் சார்பில் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் ஜாகீர், நதீம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. இறுதியாக அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Monday, May 15, 2017, 0:25 [IST]
Other articles published on May 15, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+