Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி ஆடும் ரஞ்சி போட்டி எப்போது? எந்த சேனலில், ஓடிடி-யில் ஒளிபரப்பு? டெல்லி vs. ரயில்வேஸ்

டெல்லி: 12 ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி ரஞ்சி டிராபி தொடரில் விளையாட இருக்கிறார். டெல்லி அணிக்காக விளையாட இருக்கும் விராட் கோலி டெல்லி மற்றும் ரயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்க இருக்கிறார்.

இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி பங்கேற்கும் போட்டி என்பதால் டெல்லி - ரயில்வேஸ் அணிகள் மோதும் போட்டி நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி ஜனவரி 30ஆம் தேதி (வியாழக்கிழமை) அருண் ஜெட்லி மைதானத்தில் துவங்க உள்ளது.

Delhi vs Railways Virat Kohli s Ranji trophy match date time and telecast details

முன்னதாக, இந்த போட்டி ஒளிபரப்பப்படாது என்று கூறப்பட்டிருந்தது. பொதுவாக, பிசிசிஐ முதன்மையான ரஞ்சி டிராபி போட்டியை மட்டுமே தொலைக்காட்சி மற்றும் ஸ்ட்ரீமிங் செயலிகளில் ஒளிபரப்பும். இந்த சுற்றில் கர்நாடகா மற்றும் ஹரியானா அணிகளின் போட்டி ஒளிபரப்பாக இருந்தது.

கே எல் ராகுல் அந்த போட்டியில் விளையாடுவதால், அதுவே முக்கிய போட்டியாக கருதப்பட்டது. பஞ்சாப் மற்றும் பெங்கால், பரோடா மற்றும் ஜம்மு காஷ்மீர் போட்டிகள் கூட ஸ்ட்ரீமிங்கில் மட்டுமே ஒளிபரப்பப்பட இருந்தன.

ஆனால், விராட் கோலியின் வருகையால் ஒளிபரப்பு திட்டத்தில் கடைசி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. விராட் கோலி விளையாடவில்லை என்றால், இந்த மாற்றம் இருந்திருக்காது. இருப்பினும், மிகவும் பிரபலமான போட்டி ஒளிபரப்பப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

டெல்லி மற்றும் ரயில்வேஸ் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பில்லை என்றாலும், விராட் கோலியின் வருகை இந்த போட்டியை இந்த சீசனின் மிகப்பெரிய உள்ளூர் போட்டியாக மாற்றி உள்ளது.

டெல்லி மற்றும் ரயில்வேஸ் அணிகள் மோதும் ரஞ்சி போட்டி நேரலை விவரம் -

டெல்லி மற்றும் ரயில்வேஸ் ரஞ்சி டிராபி போட்டி எப்போது?

ஜனவரி 30, வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு போட்டி தொடங்கும். காலை 9:00 மணிக்கு டாஸ் போடப்படும். இந்தப் போட்டி அதிகபட்சம் நான்கு நாட்கள் வரை நடைபெறும்.

டெல்லி மற்றும் ரயில்வேஸ் ரஞ்சி போட்டி எங்கே நடைபெற உள்ளது?

அருண் ஜெட்லி மைதானம், புது டெல்லி.

விராட் கோலி பங்கேற்கும் டெல்லி மற்றும் ரயில்வேஸ் போட்டியை நேரலையில் எப்படி பார்ப்பது?

ஜியோ சினிமா செயலி மற்றும் இணையதளத்தில் டெல்லி x ரயில்வேஸ் போட்டியை நேரலையில் பார்க்கலாம். தொலைக்காட்சியில் பார்க்க விரும்புபவர்கள் ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் இந்தப் போட்டியை நேரலையில் பார்க்கலாம்.

Story first published: Wednesday, January 29, 2025, 19:42 [IST]
Other articles published on Jan 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+