Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி போட்டிகளுக்கு நோ... ஐபிஎல் போட்டியும் நடக்காது... டெல்லி 'புகை' எதிரொலி!

டெல்லி: டெல்லி மைதானத்தில் இனி கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாது என்று கூறப்படுகிறது. டெல்லியில் நிலவும் மோசமான புகை இதற்கு காரணமாக சொல்லப்பட்டு இருக்கிறது.

குறைந்த பட்சம் 2020 வரையாவது போட்டிகள் நடத்தப்படாது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக டெல்லி நிறைய கிரிக்கெட் போட்டிகளை இழக்க வாய்ப்பு இருக்கிறது.

டெல்லியில் நடந்து வரும் இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டி பல முறை புகையால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வீரர்கள் குற்றச்சாட்டு

இலங்கை வீரர்கள் குற்றச்சாட்டு

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. டெல்லியில் நிலவி வரும் மாசு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த புகை பிரச்சனை பெரிய அளவில் வைரல் ஆனது. வீரர்கள் வாந்தி எடுப்பதும், மாஸ்க் மாட்டி சுற்றுவதும் டிரெண்ட் ஆனது.

சர்ச்சை

சர்ச்சை

இந்த நிலையில் தற்போது டெல்லி புகை மீது பலர் குற்றம்சாட்டி உள்ளனர். இனி குளிர்காலத்தில் டெல்லியில் விளையாட்டு போட்டிகள் நடத்த கூடாது என்று கோரிக்கை எழும்பி இருக்கிறது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் தலையிட்டது. பள்ளிகளுக்கே விடுமுறை இருக்கும் போது யார் அனுமதியோடு கிரிக்கெட் நடத்தினீர்கள் என்று கேட்டது. மேலும் மருத்துவர்கள் சில வீரர்களை சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள்.

போட்டிகள் நடக்காது

போட்டிகள் நடக்காது

இந்த நிலையில் தற்போது டெல்லியில் கிரிக்கெட் போட்டிகள் நடக்காது என்று கூறப்படுகிறது. ஐசிசி போட்டிகள் எதுவும் 2020 வரை அங்கு நடத்தப்படாது என்று கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதே சமயம் இந்த முடிவு புகை காரணமாக எடுக்கப்படவில்லை, மற்ற மைதானத்தில் விளையாட்டு நடக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நோ ஐபிஎல் போட்டி

நோ ஐபிஎல் போட்டி

தற்போது டெல்லியில் இனி ஐபிஎல் போட்டியும் நடக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் தொடங்க இருக்கும் ஐபிஎல்லில் டெல்லியில் எந்த போட்டியும் நடந்தப்படாது. மேலும் டெல்லி அணி விளையாடும் போட்டிகள் அனைத்து போட்டிகளும் உத்தர பிரதேசத்திற்கு மாற்றப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, December 6, 2017, 12:48 [IST]
Other articles published on Dec 6, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+