Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின் மாதிரி ஒரு பவுலர் அணியில் இருப்பது ரொம்பச் சந்தோஷம்.. கோஹ்லி

மொஹாலி: அஸ்வின் போன்ற ஒரு அருமையான ஆப் ஸ்பின்னர் அணியில் இருப்பது, அதுவும் கேப்டனுக்கு சந்தோஷம் தரும் வகையில் விக்கெட்களை வீழ்த்தும் பவுலர் அணியில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்று இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் நாளை மொஹாலியில் தொடங்குகிறது. ஒரு நாள் போட்டித் தொடரில் காயம் காரணமாக விளையாட முடியாமல் போன அஸ்வின் இப்போது டெஸ்ட் தொடருக்குத் திரும்பியுள்ளார்.

இது கேப்டன் கோஹ்லிக்கு பெரிய நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது...

பவுலர்கள்தான் முக்கியம்

பவுலர்கள்தான் முக்கியம்

டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை பேட்ஸ்மேன்களை விட பவுலர்கள்தான் மிகவும் முக்கியமானவர்கள். அந்த வகையில் ஒரு அணியின் முக்கிய பவுலர்கள் சரியான நிலையில் இருக்க வேண்டியது அவசியம்.

5 பவுலர்கள்

5 பவுலர்கள்

அணியில் 6 பேட்ஸ்மேன், ஒரு விக்கெட் கீப்பர் இருந்தால், 500 ரன்களைக் கூட குவிக்க முடியும். ஆனால் ஒரு பந்து வீச்சாளர் குறைந்தால் கூட சிக்கலாகி விடும்.

டாப் 5 கலக்கனும்

டாப் 5 கலக்கனும்

நமது பேட்ஸ்மேன்களில் முதல் வரிசையில் உள்ள 5 பேரும் சிறப்பாகவும், பொறுப்பாகவும் ஆடி ரன்களைக் குவிக்க வேண்டியது அவசியம். அதேபோல விக்கெட் கீப்பரும் பேட் செய்ய வேண்டும். ஆல் ரவுண்டர்கள் சிறப்பாக ஆடியாக வேண்டும்.

பவுலர்தான்

பவுலர்தான் "கிங்"

டெஸ்ட் போட்டிகளில் பவுலர்கள்தான் முக்கியம். ஒரு பந்து வீச்சாளரால் போட்டியை எளிதாக வென்று தர முடியும். ஆனால் ஒரு பேட்ஸ்மேனால் அதைச் செய்ய முடியாது. பவுலர்கள்தான் எந்த சமயத்திலும் அணிக்குக் கை கொடுக்க முடியும்.

அஸ்வின்

அஸ்வின்

அஸ்வின் கடந்த 3 வருடமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி வருகிறார். ஸ்பின்னர்களுக்கு ஏற்ற மைதானத்தில் அவர் பிரமிக்க வைக்கும் வகையில் ஆடி வருகிறார். பிட்ச் பொருத்தமானதாக இருந்தாலும் கூட சரியான முறையில் பந்து வீசினால்தான் விக்கெட் கிடைக்கும். அதை அஸ்வின் சரியாகச் செய்கிறார்.

லெவலே வேறு

லெவலே வேறு

கஷ்டமான நிலையிலும் கூட சிறப்பாக செயல்படக் கூடியவர் அஸ்வின். சர்வ சாதாரணமா4க 5-6 விக்கெட்களை எடுக்கக் கூடியவர். ஆட்டத்தை வேறு லெவலுக்குக் கொண்டு சென்று விடக் கூடியவர்.

எங்களது துருப்புச் சீட்டு

எங்களது துருப்புச் சீட்டு

அஸ்வின்தான் எங்களது முக்கியப் பந்து வீச்சாளர். துருப்புச் சீட்டு. இவர் போன்ற பவுலர் அணியில் இருப்பது எப்போதுமே கேப்டனுக்கு சந்தோஷம் தரும் விஷயமாகும். இலங்கையில் அவர் பவுலிங் செய்த விதமே அதற்கு நல்ல சான்றாகும் என்றார் கோஹ்லி.

Story first published: Wednesday, November 4, 2015, 16:40 [IST]
Other articles published on Nov 4, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+