மனஉறுதி போயிடல... அதிர்ஷ்டமும் எங்ககிட்டதான் இருக்கு... மெக்கல்லம் உற்சாகம்
அபுதாபி : ஐபிஎல்லின் 39வது போட்டியில் நேற்றைய தினம் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய நிலையில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் அடுத்தடுத்து கேகேஆர் அணியின் வீரர்கள் அவுட்டான நிலையில், அணியின் ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 84ஆக இருந்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் தோல்வியால் தங்களது மனஉறுதி குலைந்துள்ளதாகவும் ஆனால் தொடர்ந்து தாங்கள் 4வது இடத்திலேயே தொடரும் நிலையில், அதிர்ஷ்டம் தங்கள்வசம் உள்ளதாக கேகேஆர் அணியின் தலைமை பயிற்சியாளர் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

பேட்டிங் தேர்வு
நேற்றைய ஐபிஎல்லின் 39வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த கேகேஆர் 84 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து ஆடிய ஆர்சிபி 13.3 ஓவர்களிலேயே அதை முடித்து அபார வெற்றி பெற்றது.

அதிர்ஷ்டம் தொடர்கிறது
இந்நிலையில், இந்த தோல்வி கேகேஆர் அணியின் மனஉறுதியை குலைத்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ள அணியின் தலைமை பயிற்சியாளர் மெக்கல்லம் ஆனால் தொடர்ந்து தாங்கள் ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்திலேயே தொடரும் நிலையில், தங்களுடன் அதிர்ஷ்டம் தொடர்ந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மீண்டு வருவோம்
இந்த தொடரில் இதுவரை 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் தொடர்ந்து அந்த அணி 4வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்த போட்டி தங்களது தன்னம்பிக்கையை அசைத்து பார்த்துள்ளதாகவும் ஆனால் மனஉறுதியை கைவிடாமல் தொடர்ந்து கடின உழைப்பை வெளிப்படுத்தி மீண்டு வருவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

வலிமையுடன் பங்கேற்போம்
மேலும் அணி வீரர்களுடனும் ஆலோசனைகளை மேற்கொண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறும் வழிமுறைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இத்துடன் தொடர் முடிந்துவிடாது என்றும் அடுத்த போட்டியில் இன்னும் வலிமையாக பங்கேற்போம் என்றும் அவர் மேலும் கூறினார். இந்த நேரத்தில் தன்னம்பிக்கை அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications