Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதலாவது ஒருநாள் போட்டி- 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து!

மும்பை: முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. இதனைத் தொடர்ந்து நியூசிலாந்தை எதிர்கொண்டுள்ளது இந்தியா.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இன்றைய முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றது இந்திய அணி. இதையடுத்து கேப்டன் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இந்திய அணியின் பேட்டிங்கில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. சென்ற போட்டியில் இடம்பெற்றும் விளையாடாமல் இருந்த ஷிகர் தவான் இந்தப் களமிறக்கப்பட்டார். கே.எல்.ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார்.

நியூசிலாந்து அணி

நியூசிலாந்து அணி

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்திய அணி ஜிம்மியும், நெயில் புரூமும் இல்லை. இதனால் அந்த அணியின் மிடில் ஆர்டர் நிலைமை மட்டும் கேள்விக்குறி.

சோபிக்காத டாப் ஆர்டர்

சோபிக்காத டாப் ஆர்டர்

நீண்ட நாட்கள் பின்பு ஒன்றாக களம் இறங்கிய தவான் , ரோஹித் ஜோடி சரியாக கை கொடுக்கவில்லை. 2 சிக்ஸர்களுடன் அதிரடியாக இறங்கிய ரோஹித் 20 ரன்னில் போல்ட் ஓவரில் விக்கெட் ஆனார். அதே போல் ரோஹித் தவானும் 9 ரன்களுக்கு போல்ட் ஓவரில் விக்கெட்டை இழந்துள்ளார். கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், டோணி, பாண்டியா என அடுத்தடுத்து களமிறங்கிய அனைவரும் அவுட் ஆனார்கள்.

இந்த போட்டியில் கோஹ்லி புதிய சாதனை

இந்த போட்டியில் கோஹ்லி புதிய சாதனை

இந்த போட்டி இந்திய கேப்டன் கோஹ்லி விளையாடும் 200 வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை ஆடியுள்ள 199 போட்டிகளில் இவர் 8767 ரன்களை எடுத்துள்ளார். இந்த 200-வது போட்டியில் சதமடித்தார் கோஹ்லி. சர்வதேச ஒருநாள் போட்டியில் இது அவரது 31 வது சதமாகும். 111 பந்துகளில் சதத்தை எட்டினார் கோஹ்லி.

280 ரன்கள் எடுத்த இந்தியா

280 ரன்கள் எடுத்த இந்தியா

இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் குவித்தது. இதையடுத்து நியூசிலாந்து வெல்ல 281 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தொடக்கத்தில் தடுமாறிய நியூசி.

தொடக்கத்தில் தடுமாறிய நியூசி.

பின்னர் களமிறிய நியூசிலாந்து அணியை இந்திய அணியின் பந்து வீச்சு தொடக்கத்தில் மிரட்டியது. இதனால் 3 விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிவடைந்தன. ஆனால் லாதம்- டெய்லர் ஜோடியை பிரிப்பதில் இந்திய அணி சாதிக்க முடியவில்லை. இந்த ஜோடி நிலைத்து நின்று மளமளவென ரன்களைக் குவித்தது.

நியூசிலாந்து அணி வெற்றி

நியூசிலாந்து அணி வெற்றி

280 ரன்களை லாதம்- டெய்லர் ஜோடி எட்டியது. டெய்லர் 95 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 49 ஓவர்களில் 281 ரன்களை எளிதாக கடந்தது நியூசிலாந்து. இதன் மூலம் இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Story first published: Sunday, October 22, 2017, 21:52 [IST]
Other articles published on Oct 22, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+