Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் தொடரிலேயே அடுத்தடுத்த சாதனைகள்... சீனியர்களின் சாதனையை முறியடித்த படிக்கல்!

அபுதாபி : நேற்றைய போட்டியில் ஆர்சிபியின் துவக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல், தன்னுடைய ஐந்தாவது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

இதன்மூலம் முந்தைய தொடர்களில் ஷிகர் தவான் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் சாதனைகளை முறியடித்துள்ளார்.

லீக் போட்டிகளில் தன்னுடைய 5வது அரைசதத்தை அவர் பூர்த்தி செய்துள்ள நிலையில், தற்போது அந்த அணி பிளே-ஆப்பிற்கு முன்னேறியுள்ளது.

4 போட்டிகளில் சொதப்பல்

4 போட்டிகளில் சொதப்பல்

ஐபிஎல் 2020 சீசனில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வருகிறது ஆர்சிபி. ஆனால் கடந்த 4 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. நேற்றைய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது. ஆனால் அந்த அணியின் துவக்க வீரர் தேவ்தத் படிக்கல் தொடரில் தன்னுடைய 5வது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

சாதனையை முறியடித்த படிக்கல்

சாதனையை முறியடித்த படிக்கல்

முன்னதாக கடந்த 2008 மற்றும் 2015 ஆகிய சீசன்களில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய ஷிகர் தவான் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இணைந்து 4 அரைசதங்களை பூர்த்தி செய்துள்ள நிலையில், தற்போது இந்த சீசனில் தன்னுடைய 5வது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ள தேவ்தத் படிக்கல், அவர்களின் சாதனையை முறியடித்துள்ளார். இது அவரது முதல் ஐபிஎல் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

14 போட்டிகள்... 472 ரன்கள்

14 போட்டிகள்... 472 ரன்கள்

மேலும் இந்த ஸ்கோர் மூலம் ஆர்சிபி அணியின் அதிகமாக ரன் குவித்த வீரர்களில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளிவிட்டு 14 போட்டிகளில் 472 ரன்களை குவித்துள்ளார் படிக்கல். இதில் 51 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் அடங்கும். அரைசதம் அடித்தாலும் அந்த அணியின் மற்ற வீரர்கள் சொதப்பிய நிலையில் நேற்றைய போட்டியில் 152 ரன்களில் ஆட்டத்தை முடித்துக் கொண்டது ஆர்சிபி.

ஷிகர், அஜிங்க்யா சிறப்பு

ஷிகர், அஜிங்க்யா சிறப்பு

இதையடுத்து அடுத்த இன்னிங்சை ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஷிகர் தவான், அஜிங்க்யா ரஹானே ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் முன்பு ஆர்சிபியால் ஒன்றும் செய்ய முடியாத காரணத்தால், அந்த அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

Story first published: Tuesday, November 3, 2020, 12:31 [IST]
Other articles published on Nov 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+