
மொத்தம் 6 போட்டிகள்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது. ஜூலை 13ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்து கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தேவ்தத் படிக்கல்
இந்த தொடருக்கான இந்திய 20 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் ஷிகர் தவான் ( கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான் ( கீப்பர்), சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்), யுவேந்திர சாஹல், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், க்ருணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார் ( துணை கேப்டன்), தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை நட்சத்திரம்
இப்போட்டியில், அறிமுக வீரராக களமிறங்குகிறார் தேவ்தத் படிக்கல். பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து நிற்கும் படிக்கல் மீது இலங்கை தொடரில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இன்னும் சொல்லப்போனால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், ஓப்பனிங் வீரர் ஷுப்மன் கில் காயம் அடைந்து வெளியேற, அவருக்கு மாற்று வீரர்களாக இப்போது இலங்கையில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் ப்ரித்வி ஷா மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரை இந்திய அணி சார்பில் அழைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதற்கு பிசிசிஐ மறுத்துவிட்டது.

தவான் தான் ரோல்மாடல்
அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ள படிக்கல் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் முதன் முதலாக சர்வதேச போட்டியில் இறங்கும் போது எப்படி பயமில்லாமல் விளையாட வேண்டும் என்பதை ஷிகர் தவானை பார்த்து தான் கற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ""என்னைப் போன்ற ஒருவரிடமிருந்து கற்றுக்கொள்ள இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். தவானும் ஒரு இடது கை தொடக்க வீரர், நானும் அப்படித்தான். நான் வளரும் பருவத்தில் அவரது பேட்டிங்கை நிறைய பார்த்திருக்கிறேன். எட்டு வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே 85 பந்துகளில் சதம் அடித்திருந்தார். அவரது அறிமுக டெஸ்ட் போட்டி மறக்க முடியாதது. முதல் மேட்சிலேயே பயமின்றி அவர் அப்படி பேட் செய்திருப்பார். அறிமுகமான போட்டியிலேயே அவர் எப்படி எவ்வளவு அச்சமற்றவராக இருந்தார் என்பதில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், அவரிடமிருந்து நான் கற்றுக் கொள்ளக்கூடிய நிறைய விஷயங்கள் உள்ளன, மேலும் நான் அவரது கேப்டன்சியின் கீழ் விளையாடுவதை எதிர்நோக்கியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











